உணவகங்களில் உள்ள சர்வீஸ் சார்ஜ் பிரச்சினை குறித்து நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
காரணம் என்ன?
அண்மையில், ஹோட்டல்களும், உணவகங்களும் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில உணவகங்கள் மிக அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதாகவும் அண்மையில் சமூக வலைதளங்களில் பலரும் புகார் தெரிவித்தனர்.
சட்டப்படி சேவைக் கட்டணம் என்பது சேவைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு வாடிக்கையாளர் தாமாக விரும்பி செலுத்தும் ஒரு கட்டணம்தானே தவிர கட்டாயமாக செலுத்தப்பட வேண்டியதில்லை. ஆனால் பல உணவகங்களில் பில்லில் சேவைக் கட்டணம் சேர்த்து வசூலிக்கின்றன.
இதுகுறித்து புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து உணவகங்கள் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் உணவகங்கள் விதிக்கும் சர்வீஸ் சார்ஜ் தொடர்பான பிரச்சனையில் டெல்லி உயர் நீதிமன்றம் சர்வீஸ் சார்ஜுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்த மத்திய அரசை தனி நீதிபதி அமர்வை நாடுமாறு அறிவுறுத்தியது.
பிரச்சனை என்ன?
ஹோட்டல்களும், உணாவகங்களும் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையைவிட 5% முதல் 10% வரை சேவை வரி விதிக்கின்றன. இது குறித்து நுகர்வோர் விவகாரஙகள் துறைக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தான் உயர் நீதிமன்றம் சர்வீஸ் சார்ஜை ரத்து செய்துள்ளது.
சேவை வரி சட்டை விரோதமானது என்று கூறிய நுகர்வோர் விவகாரங்கள் துறை தேசிய உணவ சம்மேளத்தை உடனடியாக அதை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டது.
ஜூலை 4 ஆம் தேதி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது. உணவகங்கள், உணவு விடுதிகளில் உணவு சேவைக்கும் மீறி தனியாக வரி வசூலிக்கக்கூடாது என்று தெரிவித்தது.
இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட உணவகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லி உயர் நீதிமன்றம் நுகர்வோர் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
அரசு சொல்வது என்ன?
நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகமோ உணவகங்கள் சேவை வரி விதிப்பது சட்டவிரோதம் எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோகித் குமார் சிங் தேசிய உணவகங்கள் சம்மேளனத்துக்கு எழுதிய கடிதத்தில், உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் சேவை வரி பெறுவது கட்டாயமானது அல்ல. ஆனால், அது ஏதோ மிகவும் சட்டபூர்வமானது என்பதுபோல் உணவகங்கள் வாடிக்கையாளர்களை நம்பவைத்து அவர்களை மறைமுகமாக வதைக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த கடிதம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, உணவகங்களில் வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் சேவை வரி வழக்கு டெல்லி உயர் நீதிமந்த்தில் விசாரணைக்கு வந்தபோது அரசு சொலிசிட்டர் ஜெனரல் வாதிடுகையில் உணவகங்கள் சேவை வரி மூலம் மறைமுக அரசாங்கம் நடத்துகின்றன என்றார்.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதாடிய உணவகங்கள் அமைப்பு, சேவை வரி விதிப்பது என்பது விருந்தோம்பல் துறையில் 80 ஆண்டுகளுக்கும் மேல் பழக்கத்தில் உள்ளது. 1964ல் இதே மாதிரியான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் வந்தது என்பதை அரசு உற்று நோக்க வேண்டும் என்றார்.
கடந்த 18 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தனி நீதிபதி அமர்வை நாடலாம் என்று தெரிவித்தது. இந்த வழக்கு ஆகஸ்ட் 31ல் விசாரணைக்கு வருகிறது.
மேலும் உணவகங்களுக்கு நீதிபதிகள் அளித்த அறிவுரையில், சேவை வரி வசூலித்துதான் நீங்கள் உங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றில்லை. நீங்கள் வேலையமர்த்தும் பணியாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியது உங்களின் கடமை என்றார்.
இருப்பினும் தற்போதைக்கு உணவகங்கள் சேவை வரி விதிக்கலாம் என்று கூறியுள்ளது.