மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் விபத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பிய  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மும்பை கல்யாண் பகுதியில், முதியவர் ஒருவர் ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றிருக்கிறார். தூரத்தில் இதை கவனித்துவிட்ட ரயில் எஞ்சினின் டிரைவர், அவசர அவசரமாக பிரேக் பிடித்தார். ரயிலின் சக்கரம் முதியவர் மீது ஏறவிருந்த கடைசி நேரத்தில் சரியாக வண்டி நிற்க, எஞ்சின் அடியில் சிக்கிய முதியவர் காயங்கள் ஏதும் ஏற்படாமல் மயிரிழையில் முதியவர் உயிர் பிழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த ரயில்வே ஊழியர்கல் முதியவரை பத்திரமாக மீட்டு நடைமேடைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினார்கள். இந்த காட்சிகளை கண்ட அருகில் இருந்தவர், சில நிமிடங்கள் அதிர்ச்சியில் திகைத்திருந்தனர். முதியவர் ரயில் எஞ்சின் அடியில் சிக்கி மீட்கப்படும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்தார். அந்த வீடியோ,  ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.