இந்திய சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய உத்தம் சிங், பூலித்தேவர் மற்றும் தாதாபாய் நௌரோஜி ஆகியோர்கள் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
உத்தம் சிங்:
வரலாற்று பக்கங்களில், சிலரின் வாழ்க்கை வரலாறு அதிர வைத்தது என்றால், உத்தம் சிங்கிற்கும் இடமிண்டு. பஞ்சாப் மாநிலத்தில் 1899 ஆம் ஆண்டு பிறந்த பிறந்த உத்தம் சிங்,சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். அதனால் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து பள்ளி படிப்பை முடிக்கிறார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை, ஆங்கிலேய தளபதி ஜெனரல் ஓ டயர் கொன்று குவித்தார். மேலும் பெரிய பீரங்கியால் உள்ளே வர முடியவில்லை, இல்லையென்றால் இன்னும் பலரை கொன்றிருப்பேன் எனவும் டயர் தெரிவித்தார்.
இதை நேரில் பார்த்த உத்தம் சிங், டயரை கொல்வேன் என்று பொற்கோயிலுக்குச் சென்று சபதமெடுக்கிறார். அதையடுத்து பல காலங்கள் காத்திருந்த உத்தம் சிங்,1940 ஆம் ஆண்டு இங்கிலாந்தில், ஒரு நிகழ்ச்சியில் ஜெனரல் டயர் கலந்து கொள்ளும் செய்தியை தெரிந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் பேசிய டயர், இந்தியர்களை கொன்றதற்காக வருத்தப்படவில்லை என கூறுகிறார். உடனே கூட்டத்தில் இருந்து எழுந்த உத்தம் சிங் டயரை சுட்டுக் கொள்கிறார். பின்னர் அந்த இடத்தை விட்டு நகராது அதே இடத்தில் இருந்தார். அவரை கைது இங்கிலாந்து அரசு, தூக்கிலிட்டது. ஜெர்மானிய வானொலி கூறியது, இந்தியர்கள் யானை போன்றவர்கள், எதையும் மறக்காது,பழி வாங்குவார்கள் என்று பாராட்டி கூறியது. பின்னர் பலரது கோரிக்கையின் அடிப்படையில்,1967 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், உத்தம் சிங்கின் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.
பூலித்தேவர்:
இந்திய மண்ணில், ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முதன் முதலில் வீர முழமிக்கிட்டவரான பூலித்தேவர், தமிழ்நாட்டின் தென்காசி நெற்கட்டான் செவ்வலை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த பாளையக்காரராவார். ஆங்கிலேயர்கள் பூலித்தேவரின் நிர்வாகத்தின் மீது தலையிட்டு வரி கட்டுமாறு உத்திரவிடுகின்றனர். ஆனால் அந்நிய நாட்டு மன்னனுக்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என மறுக்கிறார். பீரங்கி, துப்பாக்கி வைத்திருந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை கண்டு அஞ்சாம,ல் பிற பாளையக்காரர்களை ஒன்றிணைத்து பூலித்தேவர் எதிர்க்க ஆரம்பிக்கிறார். இதனால் பாளையக்காரர்களை கண்டு ஆங்கிலேய படை எதிர்க்க அஞ்சுகிறது.
இந்நிலையில் 1755 ஆண்டு முதல் 1767 ஆண்டு வரை பல போர்களில் ஆங்கிலேயர்களை வென்று, அவருடைய நிலப்பகுதிகளை நெருங்காது பாதுகாத்து வந்தார் . இந்நிலையில் பூலித்தேவரின் போர் தந்திரத்தை ஒற்றர்கள் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள், 1767 ஆம் ஆண்டு வாசுதேவரின் கோட்டையைத் தாக்க ஆரம்பித்தனர். இந்த தாக்குதலை சற்று எதிர்பாராத பூலித்தேவர், தப்பித்து சென்று விடுகிறார். அதையடுத்து அவர் என்ன ஆனார் என்ற தகவல் சரிவர தெரியவில்லை.
தாதாபாய் நௌரோஜி:
இந்தியாவின் முதுபெரும் தலைவராக அறியப்படும் தாதாபாய் நௌரோஜி, இந்தியாவிற்கு, சுதந்திரம் வன்முறையின்றி கிடைக்க வேண்டும் என போராடிய தலைவர்களில் ஒருவர். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை சுதந்திர போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பதற்காக, லண்டனில் இந்திய சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1901 ஆம் ஆண்டு வறுமையும் பிரிட்டணுக்கொவாத இந்திய ஆட்சி ( poverty and un british rule in india) எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
இப்பத்தகம் மூலம் ஆங்கிலேயர்கள், இந்தியாவிலுள்ள சொத்துக்களை சுரண்டி லண்டனுக்கு கொண்டு செல்வதை தெளிவாக எடுத்துக் கூறினார். இந்தியாவில் வசூலிக்கப்படும் வரியை, இந்தியாவிற்கே செலவழிக்க வேண்டுமே தவிர, லண்டனுக்கு கொண்டு செல்வதை கடுமையாக எதிர்த்தார். இந்தியாவிலுள்ள பொருடகள் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் பவுண்டுகள் இழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தார். இது பலருக்கும் ஆங்கிலேயரின் நரி தந்திரத்தை புரிய வைத்தது. இப்புத்தகம் சுதந்திர போராட்டத்திற்கு, மேலும் உத்வேகத்தை அளித்தது.