நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி.க்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சன்சத் ரத்னா விருது விழா வழங்கப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், இந்த நிறுவனம் வெளியிடும் “ப்ரீசென்ஸ்” இணைய மாத இதழும் சன்சத் ரத்னா விருது திட்டத்தை ஏற்படுத்தின.
2010-ம் ஆண்டில் முதல் விருது விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். விருதுகள் பெறுபவர்கள் சிறந்த நாடாளுமன்ற வாதிகளால் வெளிப்படைத் தன்மையுடன் மக்களவைச் செயலகமும் பி.ஆர்.எஸ். இந்தியா எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ பித்யூத் பரன் மஹதோ, பாஜக எம்.பி. மக்களவை, ஜார்க்கண்ட்
ஸ்ரீ பித்யூத் பாரன் மஹாதோ, பாஜக எம்.பி. மக்களவை, ஜார்க்கண்ட்
டாக்டர் சுகந்தா மஜும்தார், பாஜக எம்.பி. மக்களவை, மேற்குவங்கம்
ஸ்ரீ குல்தீப் ராய் சர்மா, காங்கிரஸ் எம்.பி. மக்களவை, அந்தமான நிகோபார்
டாக்டர் ஹீனா விஜயகுமார் காவிட், பாஜக எம்.பி., மக்களவை, மகாராஷ்டிரா
ஸ்ரீ ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் எம்.பி. மக்களவை, மேற்குவங்கம்
ஸ்ரீ கோபால் சின்னய்யா ஷெட்டி, பாஜக எம்.பி. மக்களவை, மகாராஷ்டிரா
ஸ்ரீ சுதிர் குப்தா, பாஜக அம்.பி. மக்களவை, மத்திய பிரதேசம்
டாக்டர். அமோல் ராம்சிங் கோலே, தேசிய வட காங்கிரஸ் அம்.பி மக்களவை, மகாராஷ்டிரா
டாக்டர். ஜான் ப்ரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.மாநிலங்களவை, கேரளா
டாக்டர், மனோஜ் குமார் ஜா, ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மாநிலங்களவை, பிகார்
ஸ்ரீமதி பாவுசியா டாசீன் அக்மத் கான், தேசிய வட காங்கிரஸ் அம்.பி. மாநிலங்களவை, மகாராஷ்டிரா
ஸ்ரீ விஷம்பார் பிரசாத் நிஷாத், சமாஜ்வாதி கட்சி எம்.பி. மாநிலங்களவை, உத்திர பிரதேசம்
ஸ்ரீமதி சயா வெர்மா, காங்கிரஸ் எம்.பி. மக்களவை சட்டீஸ்கர்
நிலைக் குழு விருதுகள்
நிதிக் குழு மக்களவை
சேர்மேன் ஸ்ரீ ஜெயந்த் சின்ஹா, பாஜக ஜார்க்கண்ட்
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரக் குழு
சேர்மேன் ஸ்ரீ விஜயசாயி ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது
ஸ்ரீ டி.கே ரங்கராஜன், முன்னாள் மாநிலங்களவை எம்.பி. மற்றும் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்