மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது சமீபத்திய கடிதத்தில், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


அது உண்மை இல்லை என்றால், தனது முந்தைய புகாரை வாபஸ் பெறுமாறு சிறை நிர்வாகம் ஏன் என்னை வற்புறுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.


அவர் நேற்று வெளியிட்ட மற்றொரு கடிதத்தில், ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


“குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? நான் அமைதியாக இருந்தேன். எல்லாவற்றையும் புறக்கணித்தேன். ஆனால் உங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை நிர்வாகம், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரது அச்சுறுத்தல்கள் என்னை திருப்பிவிட்டிருக்கின்றன.


எனது குற்றச்சாட்டுகளில் ஏதேனும் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். ஒருவேளை நான் எழுப்பிய குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அரசியலை விட்டே முழுமையாக விலக வேண்டும்.  நான் அமைதியாக இருந்தேன். எல்லாவற்றையும் புறக்கணித்தேன்” என்று அந்தக் கடிதத்தில் சுகேஷ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.


டெல்லி துணைநிலை ஆளுநருக்கு  சுகேஷ் கடந்த மாதம் அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்னிடம் ரூ.10 கோடி கேட்டார். முதலமைச்சர் கெஜ்ரிவால் ரூ.50 கோடி கேட்டார் என்று புகார் தெரிவித்திருந்தார். எனினும், சுகேஷ் சந்திரசேகரின் இந்த பகிரங்க குற்றச்சாட்டை ஆம் ஆத்மி திட்டவட்டமாக மறுத்துள்ளது.


முன்னதாக, சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்காக டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மொத்தமாக 10 கோடி ரூபாய் அளித்ததாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


நள்ளிரவில் டெல்லியை நடுங்க வைத்த நிலநடுக்கம் - அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த மக்கள்


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா, ஓபிஎஸ் அணிகள் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால், அச்சின்னம் முடக்கப்பட்டது. அப்போது, டெல்லியில் சுகேஷ் சந்தரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, சசிகலா அணி தரப்பில் குறுக்குவழியில் முயற்சிகள் நடந்ததாகவும் அப்போது, சசிகலா தரப்பு தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் அட்வான்ஸாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.


CJI DY Chandrachud: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ஒய்.சந்திரசூட்!


அந்த விசாரணையில்தான், அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதன் பின்னர், அவர் அடைக்கப்பட்டிருந்த டெல்லி சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளுக்கு சுகேஷ் சந்திரசேகர் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது. சிறைக்குள் இருந்து கொண்டு அவர் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.