நேற்று அதிகாலை முதல் உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு மண்டல கால பூஜையுடன் தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை மண்டல காலம் இன்று தொடங்கி 41 நாட்கள் இருக்கும். இந்த மண்டல காலம் இன்று தொடங்கியுள்ள நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.


பெருவழிப்பாதை, சிறு வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.


கொரோனா அச்சம் நீங்கிஇருப்பதால் ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எருமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏராளமானோர் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.


உலக புகழ்பெற்ற கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல ஆண்டுகளாக 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். 


இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதற்கிடையில் சபரிமலையில் அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால், அங்கு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனைஉ எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டு பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.


அதன்பிறகு உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளதாகவும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. 


இதன் தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கக்கூடாது என மீண்டும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழல் காரணமாக சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டதாக உடனே அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார். அதில், தவறாக அச்சிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழிகாட்டு நெறிமுறை புத்தகம் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.