கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்புகழ்பெற்றதாகும். சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு சார்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஐயப்பன் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தினமும் அன்னதானம் வழங்கி வருகிறது.




நிலக்கல், பம்பை மற்றும் ஐயப்பன் கோவில் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் இந்த அன்னதானம் தினசரி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2018-2019ம் ஆண்டில் நிலக்கல்லில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றுள்ளது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


இதையடுத்து, அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் பிஜோய் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு நிலக்கல் நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகித்த ஜெயப்பிரகாஷ் மீது சந்தேகம் வலுவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் தேவஸ்தானம் போர்டு அதிகாரியாக இருந்தபோது காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருட்களை விநியோகிக்கும் ஒப்பந்ததாரர்களை ஏமாற்றி ரூபாய் 58 லட்சத்து 67 ஆயிரத்திற்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், போலீசார் ஜெயப்பிரகாஷை நேற்று கைது செய்தனர். அவரை பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க : அக்னிபத் திட்டம்... போராட்டங்களுக்கு நடுவே அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு!!


மேலும் படிக்க : கடத்தப்படும் இந்திய பெண்கள்! ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விற்பனை! தப்பித்த பெண்கள் கூறிய திடுக் தகவல்கள்!


மேலும் படிக்க : உஷார்! ஆதார் எண்ணை கொண்டு ஆட்டையைப்போட்ட ஊழியர்கள்! மாயமான வங்கி பணம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண