கேரளாவின் கொச்சி பகுதியை சேர்ந்த அட்வைத் என்ற 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் உருவத்தை ரூபிக் கியூப்களை கொண்டு வரைந்துள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'எவர் க்ரீன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உருவத்தை 300 ரூபிக் கியூப்களை கொண்டு தான் வரைந்தது பெருமையளிப்பதாக அந்த மாணவன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அட்வைத் பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோப்பி மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோரின் உருவத்தை ஏற்கனவே 300 ரூபிக் கியூப்களை கொண்டு வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 






கடந்த மார்ச் மாதம் துபாய் மன்னரின் உருவப்படத்தை ரூபிக் கியூப்களை கொண்டு வரைந்து Arabian Book of Records புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் அட்வைத். தற்போது இவர் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினியன் உருவத்தை வரைந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்தே படப்பிடிப்பில் உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம்தான் அண்ணாத்தே. அண்மையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 






இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் ரஜினிகாந்த் டிஸ்கஷனில் ஈடுபடும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இந்த புகைப்படத்தை அப்போது பார்த்த பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'தலைவா' என்று ஆர்ப்பரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 2019-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த, பிரபல இயக்குநர் சிவாவுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார் என்று செய்தி வெளியானது.






செய்தி வெளியான சில தினங்களில் அந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிசெய்தது. அண்ணாத்தே என்று பெயரிடப்பட்ட நிலையில், 2020-ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கான பணிகளை ஹைதராபாதில் தொடங்கினார் ரஜினிகாந்த். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.