RSS Plan: பிரதமராகும் யோகி.? மோடிக்கு செக் வைக்கும் RSS.! சொன்ன பேச்ச கேக்கலைன்னா இப்படித்தான்...
மோடியை ஓரங்கட்டிவிட்டு, யோகி ஆதித்யநாத்தை பிரதமராக்குவதற்கான வேலைகளில் RSS இறங்கியுள்ளதாக பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. மோடிக்கு ஆர்எஸ்எஸ் செக் வைப்பது ஏன் தெரியுமா.?

இந்திய பிரதமர் மோடியை ஓரங்கட்டிவிட்டு, யோகி ஆதித்யநாத்தை பிரதமராக்குவதற்கான வேலைகளில் RSS இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கும்பமேளாவின் போதே யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தாக சொல்லி அகிலேஷ் யாதவ் பேசியிருப்பது புயலைக் கிளப்பியுள்ளது.
மோடி - ஆர்எஸ்எஸ் இடையேயான மோதல் போக்கு
பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்தே பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் மோடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்பட்டது. ஆர் எஸ் எஸ்-ஐ மீறி பாஜகவை மோடி கண்ட்ரோலில் எடுப்பதை அவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
Just In




பாஜக கட்சி விதிகளின்படி, 75 வயதை கடந்த ஒருவர் கட்சி அல்லது ஆட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்க முடியது. அதன்படியே, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். எடியூரப்பா கர்நாடக முதலமைச்சர் ஆனதை சுட்டிக்காட்டி, இதில் விதிவிலக்கும் இருப்பதாக பாஜக தரப்பில் இருந்தே பதிலும் வருகிறது. எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் 75 வயதுக்கு பிறகு மார்க்தர்ஷன் மண்டல் என்ற குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது. செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள் என்பதால், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகுவாரா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
RSS அலுவலகம் சென்ற மோடி... சந்தர்ப்பத்தை பயன்படுத்திய எதிர்க்கட்சிகள்
இப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்று வந்தார் நரேந்திர மோடி. பிரதமர் ஆகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக அவர் அங்கு சென்றதால், ஓய்வை அறிவிக்கப் போகிறாரா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் பற்றவைத்தன. இந்நிலையில் தான், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவின் போதே, மோடியை பிரதமர் பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு, இந்தியாவின் அடுத்த பிரதமராக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அறிவிக்க பேச்சுவார்த்தை நடபெற்றது என்று, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஒரு குண்டை தூக்கிக் போட்டுள்ளார்.
பிரதமர் ரேஸில், யோகி ஆதித்யநாத் தான் RSS-ன் முதல் சாய்ஸாக இருப்பதாக, அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. மோடி போல் அல்லாமல், யோகி ஆதித்யநாத் தங்கள் கைகளுக்குள் இருப்பார் என்பதால், ஆர்எஸ்எஸ் தலைமையிடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது.
அகிலோஷ் யாதவ் கூறியது என்ன.? கட்சி விதிகள் மாறுமா.?
இது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ்,”கும்பமேளாவில் யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்ததாக தகவல்கள் வந்தன. அவர்கள் நடத்தியது மத கும்பமேளா அல்ல, அரசியல் கும்ப மேளா” என்று கூறியிருந்தார். இருந்தாலும் இந்த ஆட்சியில் பிரதமராக மோடி தான் இருப்பார் என்று பாஜகவினர் சொல்லி வருகின்றனர்.
தற்போது உலக அளவில் பிரபலமாகவும், நற்பெயர் பெற்றவருமாக இருக்கும் மோடியை தூக்கிவிட்டு, வேறு பிரதமரை நியமித்தால், அது இந்தியாவிற்கே பெரும் இழப்பாக மாறிவிடும். அதனால், ஆர்எஸ்எஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வி.
பெயர் பெற்றவர் பிரதமராக தொடர, கட்சி விதிகள் மாற்றப்படுமா அல்லது, பாஜக ரிஸ்க் எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.