Just In





காந்தி குறித்து தவறான கருத்தை கூறிய ராகுல்..ரவுண்டு கட்டும் பாஜகவினர்!
Rahul Gandhi-Mahatma Gandhi: ரயிலின் முதல் வகுப்பில் ஏறியதற்காக மகாத்மா காந்தி கீழே தள்ளி விடப்பட்டார் என்ற ராகுல் காந்தி பேச்சுக்கு, பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி, காந்தி குறித்து தவறான தகவலை குறிப்பிட்டதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காந்தி குறித்து ராகுல் காந்தி பேசியது என்ன , அதில் என்ன தவறு உள்ளது, பாஜகவினர் விமர்சிப்பது ஏன் என்று பார்ப்போம்.
ராகுல் உரையாடல் நிகழ்ச்சி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித்துடனான பாட்காஸ்ட் உரையாடல் நிகழ்ச்சியானது யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் மகாத்மா காந்தி குறித்தும் முன்னாள் பிரதமர் நேரு குறித்தும் பேசினார், ராகுல் காந்தி. அதில் மகாத்மா காந்தி , ஆங்கிலேயர்களால் ரயிலில் இருந்து , கீழே தள்ளி விடப்பட்டார் என கூறியிருந்தார். காந்திஜி இங்கிலாந்தில் ரயிலில் இருந்து எப்போது தூக்கி எறியப்பட்டார். அப்போது, என் கொள்ளுத் தாத்தாவும் அவரது உறவினர்களும் அலகாபாத் ரயில் நிலையத்திற்குச் சென்று, சில பிரிட்டிஷ்காரர்களை முதல் வகுப்பிலிருந்து வெளியேற்ற முடிவு செய்தனர் என ராகுல் பேசியிருக்கிறார்.
பாஜக விமர்சனம்:
இந்தக் கருத்து, பாஜக எம்பி லஹர் சிங் சிரோயா, இங்கிலாந்தில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்டதாக காந்தியின் கருத்துக்கு, ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ நான் அந்த வீடியோவை ஆர்வத்துடன் பார்த்தேன். இருப்பினும், மகாத்மா காந்தி இங்கிலாந்தில் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக அவர் (2 நிமிடங்கள் 40 வினாடிகளில்) கூறியதைக் கேட்ட போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
ராகுலிடம் இருந்து யாரும் வரலாற்றைக் கற்றுக் கொள்ளக் கூடாது. தென்னாப்பிரிக்காவில்தான் காந்தி ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார், பிரிட்டனில் இல்லை என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பிரிட்டன் என ராகுல் தவறான தகவலை கூறுகிறார். நேருவின் ஆதரவாளர்கள் , அறிவார்ந்த காங்கிரஸ்காரர்களும், மிகவும் நல்ல மனிதரான சந்தீப் தீட்சித்தும் வீடியோவை வெளியிடுவதற்கு முன்பு, இந்தப் பிழையை கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பேச்சை குறிவைத்து மட்டுமன்றி, அவரது சைகையும்கூட பாஜகவினர் பலமுனைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது காந்தி குறித்து தவறான பிழையை குறிவைத்து, பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராகுல் எப்போதும் வரலாற்றை தவறாக பேசுவார், அவருக்கு வரலாறு சரியாக தெரியாது, அவரிடம் இருந்து வரலாற்றை கற்றுக் கொள்ளக் கூடாது எனவும் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.