பெங்களூருவில் உள்ள கார் உரிமையாளர் ஒருவர், ரூ. 11 லட்சம் மதிப்புள்ள வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் காரை பழுதுபார்ப்பதற்கு கொடுத்தபோது ரூ. 22 லட்சம் பில் கொடுத்து ஷோரூம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


ரூ. 22 லட்சம் பில்


அமேசான் தயாரிப்பு மேலாளராக பணிபுரியும் அனிருத் கணேஷ், லிங்க்ட்இன் மூலம் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் பெங்களூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது கார் சேதமடைந்ததாக அவர் கூறினார். அது வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியது, அதைத் தொடர்ந்து அவர் தனது வாகனத்தை சரி செய்ய வைட்ஃபீல்டில் உள்ள வோக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ ஷோரூமிற்கு எடுத்து சென்றபோது இது போன்று நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். "இரவு 11 மணியளவில் எனது காரை இடுப்பளவு ஆழமான தண்ணீரில் இருந்து ட்ரக் வைத்து இழுத்துச் சென்றோம்" என்று திரு கணேஷ் லிங்க்ட்இனில் எழுதினார். காரை சரி செய்ய ஷோரூமில் விட்ட பிறகு, சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, சேவை மையம் அவருக்கு ரூ. 22 லட்சம் பில்லை அனுப்பியதால் அதிர்ச்சியடைந்துளார்.



பில்லுக்கு பில் போட்ட ஷோரூம்


பின்னர் கணேஷ் தனது இன்சூரன்ஸ் வழங்குநரான அக்கோவைத் தொடர்பு கொண்டார், அவர்கள் கார் மொத்த நஷ்டமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பழுதுபார்க்கும் கடையிலிருந்து அதை எடுத்துக்கொள்வதாகவும் அவருக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் ஷோரூமில் இருந்து எடுப்பதற்காக சென்றபோது அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், வாகனத்தை எடுக்க ₹44,840 செலுத்தவேண்டும் என்று ஷோரூமில் கூறி உள்ளனர். காருக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் உங்கள் பில்லில் அடங்கியுள்ளது, அது நாங்கள் காரை பரிசோதித்த பிறகு தயாரிக்கப்பட்ட ஆவணம், அதனை செய்ததற்காக இந்தக் கட்டணம் தேவை என்று கூறியது.


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


பிரச்சனையை தீர்த்து வைத்த வோக்ஸ்வேகன்


அதிர்ஷ்டவசமாக, கணேஷ் அனுப்பிய மற்றொரு மெயிலுக்கு பிறகு வோக்ஸ்வாகன் இந்த சிக்கலைத் தீர்த்தது. நிறுவனம் பழுதுபார்க்கும் செலவை ₹5,000 இல் முடிக்க முடிவு செய்தது. "வோல்க்ஸ்வேகன் இந்தியா குழு (திரு.சுமந்த் மற்றும் திருமதி.பூனம்) பேசி, இதுபோன்ற சூழ்நிலையில் மொத்த நஷ்டம் ஏற்பட்டால் கார் உரிமையாளர்களின் மதிப்பீடு/சேமிப்பிற்காக அதிகபட்ச வரம்பு ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அனைவருக்கும் இந்த தகவல் உதவும் என்று நம்புகிறேன்", என்று கணேஷ் மேலும் எழுதியிருந்தார். இறுதியாக செப்டம்பர் 26 ஆம் தேதி தனது காரை திரும்பப் பெற்றதாகவும் அவர் கூறினார்.



வோக்ஸ்வேகனை தாக்கிய நெட்டிசன்கள்


"டீலர்ஷிப் மற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையைதான் உறுதி செய்துள்ளது, மேலும் எனது புரிதலின்படி, வோக்ஸ்வேகன் இப்போது பெங்களூர் முழுவதும் ஒரே விலையை வசூலிக்கிறது" என்று லிங்க்ட்இன்னில் கணேஷ் எழுதினார். இதற்கிடையில், அவரது இடுகைக்கு பதிலளித்த பல இணைய பயனர்கள் வாடிக்கையாளர்களை சுரண்டுவதாக ரிப்பர் ஷோரூம்கள் வைத்துள்ளனர் என்று கூறினர். "நீங்கள் எப்படி ஒரு பில் போடுவதெற்கெல்லாம் கட்டணத்தை வசூலிக்கலாம்? அதாவது நான் காரை சரி செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை எஸ்டிமேட் செய்யப்பட்ட பில்லை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது? மேலும் இது உங்கள் வணிகத்திற்காக நீங்கள் செய்கிற கீழ்த்தரமான காரியம் இல்லையா?" என்று ஒரு பயனர் எழுதினார். "இது பயமாக இருக்கிறது. முதலாளித்துவத்தில், நுகர்வோர் பாதுகாப்பிற்கு மரியாதை இல்லையா?" என்று மற்றொருவர் கேட்டார். பல பயனர்களும் தங்கள் அனுபவங்களை டீலர்களுடன் பகிர்ந்து கொண்டனர். "எனது நகரத்தில் உள்ள வோக்ஸ்வேகன் ஷோரூமில் இதுபோன்ற அனுபவங்களைச் சந்தித்ததால், உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது" என்று ஒரு பயனர் எழுதியிருந்தார்.