‘அம்மன்’ படத்தில் வில்லனாக நடித்தவரின் புகைப்படத்தை வெளியிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சுரேந்தர பிரசாத் யாதவ்.


உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவின் 57ஆவது பிறந்தாள். இவரது பிறந்தநாளை அந்தந்த மாநில பாஜக உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன், தமிழ்நாடு, பாஜக தலைவர் அண்ணாமாலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.


இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சுரேந்தர பிரசாத் யாதவ் அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது டுவிட்டர் பதிவில், நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்து, ‘அம்மன்’ திரைப்படத்தில் சண்டா கேரக்டரில் வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஏற்படுத்தியது.


 






சுரேந்தர பிரசாத் யாதவ், உண்மையாக தெரிந்து இவ்வாறு பதிவிட்டாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்று நெட்டிசன்கள் குழம்பி இருந்தனர்.


 






இதைப்பார்த்த ஒருவர், அம்மன் படத்தில் நடித்தவரின் முகத்தை போலவே அப்படி இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அவர்,  ‘ரீல் மற்றும் ரியல் கதாபாத்திர அடிப்படையில் இதை எழுதியுள்ளேன். ஆனால், உருவத்தை கொண்டு இதனை செய்யவில்லை” என்று கூறினார்.