இந்தியாவில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுவும் உத்திரபிரதேச மாநிலம் இதில் முதன்மையாக உள்ளது. பெரும்பாலும் பாலியல் வன்கொடுமை செய்யும் ஆணை அதனை யாராவது அறிந்தால், அவருக்கு எதிராக குரல் கொடுப்பார்கள், அல்லது அவர்களை தெரிந்திருந்தால் அடித்து உதைத்து காவலில் ஒப்படைப்பார்கள். ஆனால் குடும்பத்தினரே அவருக்கு ஆதரவு தரும் வகையிலான செய்திகளை அதிகம் காண முடிகிறது. அது போலவே உத்திரபிரதேசத்தில் ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை போலீஸாருக்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு, கரு தரித்த 20 வயது பெண்ணை தனியார் மருத்துவமனையில் வைத்து கரு கலைப்பு செய்ய முயற்சித்த வழக்கில் சம்மந்த பட்ட குற்றவாளியின் தந்தை, மாமா ஆகியோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.



உத்திரபிரதேசத்தில் ஹமிர்புர் மாவட்டத்தில் உள்ள மஹோபா என்னும் ஊரில் ஆறு மாதங்களுக்கு முன்பு 20 வயது தலித் பெண்ணை பாலியல்  வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தின் ஹாமிர்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததில் அவரது தந்தை, மாமா மற்றும் மருத்துவர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அந்த 20 வயது பெண் அன்று வயலில் வேலை செய்துகொண்டிருந்தார், அப்போது ஷைலேந்தர் சிங் என்பவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் அது குறித்து போலீசாருக்கு எந்த  தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சில நாட்கள் சென்று செப்டம்பர் 25 அன்று, அவர் இரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அப்போதுதான் அவர் கரு  தரித்து இருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது என்று ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களுக்கு அந்த பெண் கரு தரித்திருப்பதை அறிந்ததும் கருவை கலைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.



கரு கலைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண், அடுத்த நாளே மருத்துவமனையிலேயே இறந்தார். பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷைலேந்திர சிங்கும், அதற்கு உடந்தையாக இருந்ததற்காக அவரது தந்தை ராம் நரேன் மற்றும் மாமா சிவ் நரேன் ஆகியோருக்கு எதிராக இரு தினங்கள் முன்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் வியாழக்கிழமை மாலை அதாவது நேற்று மாலை கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.