RG Kar Protest: கொல்கத்தாவில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, இளநிலை மருத்துவர்கள் உடனான, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.


மருத்துவர்களுடன் மம்தா பேச்சுவார்த்தை:


கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவரம் ஒட்டுமொத்த நாட்டயும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டட்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட 4முதல் 4 முயற்சிகள் தோல்வியுற்றன. நிண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று இரவு, இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.


கொல்கத்தா கமிஷ்னர் மாற்றம்:


பேச்சுவார்த்தையின் முடிவில், சுகாதாரத் துறையின் இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் கொல்கத்தா காவல்துறை ஆணையரை நீக்க வேண்டும் என்பன போன்று ஐந்து கோரிக்கைகளில் மூன்றில் மூன்றை ஒப்புக்கொண்டதாக முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, "பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல், ராஜினாமா செய்ய தாமாக முன்வந்துள்ளார். செவ்வாயன்று மாலை 4 மணிக்கு, வினீத் புதிய காவல் ஆணயரிடம் பொறுப்பை ஒப்படைப்பார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்யும். போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது" என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 






மம்தா பானர்ஜி கோரிக்கை:


மேலும், “பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளில் 99% நாங்கள் ஒப்புக்கொண்டோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும், சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பயிற்சி மருத்துவர்கள் உடனட்யாக மீண்டும் பணிக்கு வருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். முன்னதாக, சுமார் 30 பயிற்சி மருத்துவர்கள் அடங்கிய குழு நேற்று மாலை 6.20 மணிக்கு முதலமைச்சரின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது. முதலில் 5 மணிக்கு திட்டமிடப்பட்ட கூட்டம் இரண்டு மணி நேரம் கழித்து, இரவு 7 மணிக்கு தொடங்கியது. 


கல்லூரி முன்னாள் முதல்வர் கைது:


முன்னதாக, பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்டதாக, ஒருவர் கது செய்யப்பட்டுள்ளார். அதோடு, கொலையை மறைக்க முயன்றதாகவும், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரை சிபிஐ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.