பழிவாங்கும் குரங்குகள்… நாய்க்குட்டிகளை தள்ளிவிட்டு கொன்ற பயங்கரம்.. சிறைபிடித்த வனத்துறையினர்!

குரங்குகள் குட்டி நாய்களை பிடித்துக்கொண்டு மாடி மற்றும் மரங்களுக்கு மேல் சென்று வைத்துக்கொள்கின்றன. அங்கிருந்து குட்டி நாய்களை கீழே தூக்கி எறிந்து, அவற்றை கொன்று விடுகின்றன.

Continues below advertisement

பொதுவாக அதிகமாக குறும்பு செய்யும் சிறுவர்களை பார்த்தாக குரங்கு சேட்டை செய்யாதீர்கள்  என கூறும் வழக்கம் உள்ளது. ஆனால், குரங்குகளுக்கு பழி வாங்கும் எண்ணமும் உண்டு என்பதை முன்னதாக நடந்த பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. அந்த வகையில், குரங்கு குட்டியை ஒன்று நாய் கொன்றதற்கு, நாய் இனத்தின் மீதே ஒரு போரை தொடுத்துள்ளது. கண்ணில் படும் குட்டிநாய்களை பிடித்துச் சென்று மரங்களில் இருந்து அவற்றை கீழே தள்ளி விட்டு குரங்குகள் கொலை செய்துள்ளன. அந்த வகையில் சுமார் 250 குட்டிகளை, குரங்குகள் கொன்றுவிட்டதாகவும், தற்போது கிராம மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் அங்கே உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவற்றை செய்த குரங்குகளில் இரு குரங்குகளை வனத்துறையினர் சிறைபிடித்துள்ளார்கள். விசாரணையில் நாய்களுக்கும் - குரங்குகளுக்கும் இடையே கேங் வார் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்குகள் கொன்ற நாய்க்குட்டிகளின் எண்ணிக்கை 250-யை தாண்டும் என்று சில தகவல்கள் கூறுகின்றன. இதன் பின்னணி குறித்த விபரங்கள் பெரும் வியப்பை அளிப்பதாக உள்ளன.

Continues below advertisement

இங்கு வெறிபிடித்த குரங்குகள் குட்டி நாய்களை பிடித்துக் கொண்டு மாடி மற்றும் மரங்களுக்கு மேல் சென்று வைத்துக் கொள்கின்றன. அங்கிருந்து குட்டி நாய்களை கீழே தூக்கி எறிந்து, அவற்றை கொன்று விடுகின்றன. இந்த தொடர்ந்து நடைபெற்றதை பார்த்த கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் நாய்குட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. குட்டி நாய் என்று பாராமல் கொலைகார குரங்குகள் இப்படி அட்டகாசம் செய்கிறதே என்று கவலைப்பட்ட அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு குரங்குகளுக்கு வலை விரிக்கப்பட்டது. இதில் அட்டகாசம் செய்த 2 குரங்குகள் பிடிக்கப்பட்டன. மேலும் சில குரங்குகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குட்டி நாய்களை குரங்குகள் தேடித் தேடி வேட்டையாடுவதற்கு காரணம் இருப்பதாக லவூல் கிராம மக்கள் சொல்கின்றனர். அதாவது சில வாரங்களுக்கு முன்பாக, நாய்கள் கூட்டம், குட்டி குரங்கு ஒன்றை கடித்துக்கொன்று தெருவில் இழுத்துச் சென்றுள்ளன. இதைப் பார்த்த பின்னர்தான், குரங்குகள் கூட்டம் பழிக்கும் பழி வாங்கும் விதமாக நாய்க்குட்டிகளை போட்டுத் தள்ளி வருகின்றன.

இதேபோன்று நாய்களும் குரங்குகளை பதிலுக்கு பதில் தாக்கியுள்ளன. இந்த சம்பவங்கள் லவூல் கிராம மக்களிடையே நிம்மதியை பறித்துள்ளது. பிடிபட்ட 2 குரங்குகள் நாக்பூர் அருகே வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் உயிரினங்கள் மனிதர்களுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை, இந்த சம்பவம் தெரிவிக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola