வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு REMAL என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் நாளை மறுநாள் அதாவது வரும் மே 25ஆம் தேதி வங்கக்கடலில் உருவாக உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை (மே 24 ஆம் தேதி) காலை வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் வரும் 25ஆம் தேதி காலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மாறக்கூடும். தொடர்ந்து மே 26 ஆம் தேதி வங்கதேசம் அருகே புயல் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை முதல் கொல்கத்தாவில் கனமழை கொட்டி வருகிறது. ரெமல் புயல் காரணமாக குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் நாளையும், மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு - மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 25 ஆம் தேதி, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26 ஆம் தேதி, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.