கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாய், 18 ஆயிரத்து 951 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரிலையன்ஸ் குழுமத்தின் வருவாய் விவரங்கள்:


உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்), 2023-24 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகத்தில் குறைந்த வரம்புகள் மற்றும் அதிக வரி செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக நிகர லாபத்தில் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.


அதன்படி, 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 19 ஆயிரத்து  299 கோடி ரூபாயை அந்நிறுவனம் மொத்த வருவாயாக பெற்று இருந்தது. ஆனால், கடந்த 2023-24 நிதியாண்டின் கடைசி காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்த்ன் மொத்த வருவாய் 18 ஆயிரத்து 951 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. ப்ளூம்பெர்க் நடத்திய ஆய்வில், ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்ட காலகட்டத்தில் 19 ஆயிரத்து 726 கோடி ரூபாய் மொத்த வருவாயாக பெறும் என கணிக்கப்பட்டு இருந்தது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் தேய்மானத்திற்கு முந்தைய வருவாய் ஆனது  (Ebitda) 14% அதிகமாக இருந்தது.


2023 -24 நிதியாண்டிற்கான ரிலையன்ஸ் குழ்மத்த்ன் மொத்த வருவாய் ரூ. 69 ஆயிரத்து 621 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது 2023 நிதியாண்டை விட 4% அதிகமாகும்.


துறை ரீதியான வருவாய் விவரங்கள்:



  • மார்ச் காலாண்டில் எண்ணெய் முதல் ரசாயணம் பிரிவுக்கான வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் 3 சதவிகிதம் உயர்ந்து 16,777 கோடியாக இருந்தது

  •  KG-D6 துறையில் உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சியானது எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவில் குறைந்த கச்சா விலையை ஈடுகட்ட உதவியது. இந்த பிரிவுக்கான வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் 48% உயர்ந்து ரூ. 5,606 கோடியாக இருந்தது. 

  • நிறுவனத்தின் சில்லறை விற்பனைப் பிரிவுக்கான வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் 18% வளர்ச்சியை கண்டு 5,829 கோடியாகப் பதிவாகியுள்ளது. கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்தப் பிரிவு வருவாய் கிட்டத்தட்ட 11% வளர்ச்சியைக் கண்டு ரூ.76,627 கோடியாக இருந்தது. நிறுவனம் இப்போது நாடு முழுவதும் 18,836 கடைகளை நடத்தி வருகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த கடைகளின் எண்ணிக்கை 18,040 ஆக இருந்தது.

  • ஜியோ பிளாட்ஃபார்ம்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் சேவைகளை உள்ளடக்கிய நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் பிரிவுக்கான வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் ரூ. 14,644 கோடியாக உள்ளது. அதாவது முந்தைய ஆண்டை காட்டிலும் 9% அதிகரித்துள்ளது.


திங்களன்று மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்கு மதிப்பு 0.65 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,960.6 இல் நிறைவடைந்தது. வர்த்தகம் முடிந்ததும் நிதிநிலை முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.