வானிலை ஆய்வு மையம் தரப்பில் மாநிலத்தின் மழை பொழிவு பொறுத்து வண்ண குறியீடுகள் மூலம் எச்சரிக்கை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் அர்த்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய வானிலை நிலவரம்:


வடமேற்கு இந்தியா: அடுத்த 5 நாட்களில் உத்தரகண்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  உத்தரபிரதேசத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழை பெய்யும்.  கிழக்கு ராஜஸ்தானில் 5 நாட்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் படிப்படியாக மழை குறையு வாய்ப்புள்ளது.  ஜூலை 11 ஆம் தேதி உத்தரகாண்ட் மற்றும் வடமேற்கு உத்தரபிரதேசத்தில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 


கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு இந்தியா: ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்  அடுத்த 3 நாட்களுக்கு இமயமலை மேற்கு வங்காளம் & சிக்கிம், அசாம் & மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் பீகார் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  11, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒடிசாவில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா மற்றும் துணைப் பகுதிகளிலும் மிக அதிக மழை பெய்யக்கூடும்.  


மத்திய இந்தியா: அடுத்த 5 நாட்களில் மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பாவில் மிதமான மழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  ஜூலை 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.  மேற்கு இந்தியா: அடுத்த 5 நாட்களில் கொங்கன் மற்றும் கோவாவில் மிதமான மழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.  ஜூலை 11, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மத்திய மகாராஷ்டிராவின் காட் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும். 


தென்னிந்தியா: அடுத்த 4 நாட்களில் கடலோர கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் மிதமான மழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது;  11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கடலோர ஆந்திரப் பிரதேசம், 11 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தெற்கு உள் கர்நாடகாத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாநிலங்களில் தொடர் கனமழையால் ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறத்திற்கு ஒரு அர்த்தம் உள்ளது.


வண்ண குறியீடுக்கான அர்த்தம்:


மாநிலங்களில் மழைப்பொழிவின் தீவிரத்தை மக்களுக்கு தெரிவிக்க, இந்திய வானிலை ஆய்வு மையம்  வண்ண - குறியிடப்பட்ட எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. 'ஆரஞ்சு' எச்சரிக்கை என்பது மிகவும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது அர்த்தம்.  மேலும் ஒரே நாளில் 115.6 -204.4 மிமீ மழை பொழிவு  இருக்கும் என்பது அர்த்தம். 'ரெட்' அலர்ட் என்பது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உடனடி நடவடிக்கை தேவை என்பது பொருள். மேலும் ரெட் அலர்ட்டின்போது,  204.5 மிமீக்கு மேல் மழை பெய்யும் என அர்த்தம். மஞ்சள் நிறம் என்பது லேசான மழை பெய்யும் என அர்த்தம். பச்சை நிறம் என்பது எந்த எச்சரிக்கையும் இல்லை என அர்த்தம்.