அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதானி பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் அந்நிறுவனத்தில் பங்கு விற்பனை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியதாக புகார் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


வங்கிகள் அதானி குழுமத்திற்கு கடன் வழங்கிய நிலையில் தற்போது அதானி குழும பங்குகள் கடுமையாக சரிந்துள்ளது. இந்த கடன் வாராக்கடனாக மாறிவிடுமோ? என்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது