• சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400க்கும், கிராம் ரூ.9,050க்கும் விற்பனை
  • விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது - சென்னை பனையூரில் காலை 10 மணிக்கு தவெக அலுவலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம்; தவெக தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தகவல்
  • மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும்தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி - அஜித்குமார் உடலின் வெளிப்புறத்தில் சிராய்ப்பு காயங்கள் என 44 காயங்களும், ரத்த கட்டுக் காயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதும், சிகரெட்டால் சூடு வைத்ததும் அம்பலம்
  • சென்னையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய மேலும் 2 பேர் அரும்பாக்கம் போலீசாரால் கைது - இவர்கள் இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீஸ் தகவல்
  • சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று (ஜூலை 3) தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,615 கன அடியிலிருந்து 19,286 கன அடியாக அதிகரிப்பு
  • திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் கோமதி கணவர் ஸ்டீபன் ராஜால் வெட்டிக் கொலை! திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம். கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஸ்டீபன்ராஜ் சரண்
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து, வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்வு. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!