ஹாலிவுட் பாடகரும் மற்றும் இசையமைப்பாளரான  ராகுல் ஜெயின் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பொய்யான குற்றச்சாட்டு என மறுத்திருக்கிறார் ராகுல் ஜெயின்


ஃப்ரீலான்ஸ் ஆடை வடிவமைப்பாளரான தன்னை ராகுல் ஜெயின் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
30 வயதான அந்தப் பெண் ஓஷிவாரா காவல் நிலையத்தில் அளித்த புகாரியில் உள்ள தகவல்களின்படி ராகுல் ஜெயின் தன்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு பேசினார் என தெரிவித்திருக்கிறார். ராகுல் ஜெயின்,தன்னுடைய வேலைகள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார் எனவும், தன்னை தனிப்பட்ட ஒப்பனையாளராக வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறி அழைத்ததாக அந்தப் பெண்  குறிப்பிட்டுள்ளார். 


அந்தேரியின் புறநகர் பகுதியில் இருக்கும்  உயரமான அப்பார்ட்மெண்டில் தன்னை வந்து சந்திக்கும்படி  கூறி ராகுல் ஜெயின் தன்னை அங்கு வர வைத்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் தான் ராகுல் ஜெயின் அழைத்த அபார்ட்மெண்டிற்கு சென்றதாகவும் ,தன்னுடைய படுக்கை அறையில் இருக்கும்  உடைகள் மற்றும் பொருட்களை  காண்பிப்பதற்காக உள்ளே அழைத்துச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம்  செய்ததாக குறித்த பெண் புகாரியில் கூறியிருக்கிறார்.


மேலும்   அந்த பாலியல் அத்துமீறலை  தவிர்ப்பதற்காக தான் போராடியபோது, தன்னை அவர் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருக்கிறார். அதேபோல் அங்கிருந்த ஆதாரங்களையும் ராகுல் ஜெயின்  அழித்ததாகவும், தன்னுடைய  புகாரில் பதிவு செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று நடந்ததாக காவல் நிலையத்தில் பதிவு செய்திருக்கும் எஃப் ஐ ஆர் ஐ மேற்கோள் காட்டி காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார் .


மேலும் ராகுல் ஜெயின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்புக்கான தண்டனை), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துவதற்கான தண்டனை) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது இவ்வாறு பாலியல் புகார்கள் வருவது புதிது அல்ல‌ என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த அக்டோபரில் பாலிவுட் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஒருவர் ராகுல் ஜெயின் மீது பாலியல் பலாத்காரம், வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்தல், குழந்தையை கைவிடுதல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காக எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இசை அமைப்பாளரும் பாடகர்மான ராகுல் ஜெயின் கூறுகையில் ஜெயின், "இந்தப் பெண்ணை எனக்குத் தெரியாது. அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை என மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பும் ஒரு பெண் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், ஆனால் எனக்கு நியாயம் கிடைத்தது. இந்தப் பெண் அந்தப் பெண்ணின் கூட்டாளியாக இருக்கலாம்"  என்றும் இது ஒரு ஆதாரமற்ற போலி வழக்கு  என்றும் ஜெயின் தெரிவித்துள்ளார்.


2016 ஆம் ஆண்டு வெளியான ஃபீவர் ஹிந்தித் திரைப்படத்தில் "தெரி யாத்" பாடலின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ராகுல் ஜெயின். 1921 ஸ்பாட் லைட் மாயா,ஜூட்டா கஹின் கா,சோரியன் சோரோன் சே கம் நஹி ஹோதி, என்கவுண்டர்,காகாஸ் போன்ற படங்களுக்கு இசையமைப்பாளராகவும் சில படங்களுக்கு பாடலும் பாடியிருக்கிறார் .மேலும் இவர் ஒரு பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.