Raksha Bandhan 2023 Wishes: சகோதர பந்தத்தை வெளிப்படுத்தும் பண்டிகையான ரக்ஷாபந்தன் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது.


ரக்ஷாபந்தன் 2023:

 

சகோதர-சகோதரிகளின் உறவின் வலிமையை உணர்த்தும் ஒரு பண்டிகைதான் ரக்ஷா பந்தன். இந்த பண்டியை வட இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனாலும் அண்மைக்காலமாக  ரக்ஷாபந்தன் பண்டிகையை அனைத்து மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், சகோதரர்களுக்கு சகோதரிகள் ராக்கி அணிவிப்பார்கள். அவர்கள் நீண்ட ஆயுளுடன், செல்வ வளத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். சகோதரிகள் பூஜை செய்து ராக்கி கயிறு கட்டிவிட்டவுடன் பதிலுக்கு சகோதரர்கள் பரிசுப் பொருட்கள் கொடுத்து, அவர்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள்.



 

ராக்கி என்பது ஒரு கயிற்றை சகோதரர் கையில் கட்டுவது மட்டுமல்ல. அவர்களிடையே உள்ள இணைப்பை காட்டும் ஒரு பண்டிகை ஆகும். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெளர்ணமி திதி ஆகஸ்ட் 30 காலை 10.58 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 7.05 மணிக்கு முடிவடைகிறது. பஞ்சாங்கத்தின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ராக்கி கயிறை சகோதரிகள் சகோதரர்களுக்கு அணிவிக்கலாம்.  ஆனால் நாம் அணுக முடியாத அளவுக்கு தூரமாகவோ, இன்று பார்க்க முடியாமலோ இருப்பவர்கள் என்ன செய்ய முடியும். அவர்களுக்கு வாழ்த்து செய்தியை பகிருங்கள். அதற்கான வாழ்த்து அட்டைகள், வாழ்த்து வாசகங்கள் இதோ..
 

வாழ்த்து வாசகங்கள்:


  • ஒரு குழந்தைபோல பாவித்து பல நேரங்களில் எனக்கு அம்மாவாக இருக்கும் என் அன்பு சகோதரிக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

  • உடன்பிறந்தால் தான் உடன்பிறப்பு என்பது இல்லை. உள்ளத்தை புரிந்துகொண்ட அனைவரும் உடன்பிறப்புகளே!

  • இந்த ரக்ஷா பந்தன் தினத்தில் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இனி வரும் காலங்களில் நம் உறவு அன்பின் பிணைப்பு தொடர்ந்து வலுப்பட வேண்டும். உனக்கு சகோதரனாக மட்டுமின்றி, நல்ல நண்பனாக இருப்பேன்.

  • உடன் பிறந்தவர்களுக்கு தெரியும், சகோதரன்/சகோதரியின் மனதில் என்ன இருக்கிறது என்று, வாழ்க்கையில் அந்த சிறப்பான தருணங்கள் நீடிக்க, அன்பில் திளைக்க ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.




  • நண்பர்கள் பலர் என் வாழ்க்கையில் வந்து செல்கிறார்கள். ஆனால் என் அன்பான சகோதரனாக நீங்கள் எப்போதும் இருக்க விரும்புகிறேன்.

  • ரத்தத்தால் மட்டும்தான் நீ எனக்கு சகோதரி ஆக வேண்டும் என்றில்லை… மனதால் கூட ஆகலாம்! ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

  • அண்ணன் தங்கை உறவு என்பது வெறும் கையில் கட்டும் கயிறு மட்டுமல்ல. அது இதயத்தால் கட்டப்பட்டது. என் அண்ணணுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்.

  • அண்ணனை விட சிறந்த துணை யாரும் இல்லை. தங்கையை விட சிறந்த தோழி யாரும் இல்லை.ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்.