Raksha Bandhan 2023 Gift:  ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டும் சகோதரிகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.


ரக்ஷா பந்தன் 2023:


சகோதர சகோதரிகளின் உறவை பலப்படுத்தும் பண்டிகையாக கருதப்படுவது ரக்‌ஷா பந்தன்(Raksha Bandhan) . இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் கொண்டாடப்பட்டாலும் , வட இந்தியாவில் பெரும்பாலானோர் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. இந்த பண்டிகையின்போது வித விதமாக அலங்காரம் செய்யப்பட்ட அல்லது வெவ்வேறு வகைகளிலான ராக்கி என்னும் கயிற்றினை சகோதரிகள் , சகோதர்களின் கைகளில் கட்டி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து இனிப்புகளை வழங்குவார்கள்.


இது அவர்களின் நலம் மற்றும் வளம் வேண்டி சகோதரிகள் செய்யும் முறையாக கருதப்படுகிறது. பதிலுக்கு சகோதர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கி , பரிசுப்பொருட்களை வழங்கி அவர்களின் பாதுகாப்பிற்காக உறுதி அளிக்கிறார்கள் என்பதுதான் பண்டிகையின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ராக்கி என்பது ஒரு கயிறை சகோதரர் கையில் கட்டுவது மட்டுமல்ல. அவர்களிடையே உள்ள இணைப்பை காட்டும் ஒரு பண்டிகை ஆகும்.  இந்நாளில் ராக்கி கட்டும் சகோதரிகளுக்கு என்னென்ன பரிசுகள் வழங்கலாம் என்பதை பார்ப்போம்.


சுற்றுலா டிக்கெட் 


ரக்ஷா பந்தன் அன்று உங்களது சகோதரிக்கு பிடித்த இடத்திற்கு செல்வதற்கான டிக்கெட்டை பரிசாக கொடுக்கலாம். இந்த பரிசு இருவருக்கும் இடையிலான பந்தத்தை அதிகரிக்கக் கூடும்.


புத்தகங்கள், அறிவுசார்ந்த கேட்ஜெட்டுகள்.


தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் புத்தகங்கள் ஏராளம். புத்தகங்களை நீங்கள் உங்கள் சகோதரிகளுக்கு பரிசளிக்கலாம். கிண்டில்களை பரிசளிக்கலாம்


போட்டோ ஆல்பம்


உங்கள் சகோதரிக்கு போட்டோ ஆல்பம் பரிசாக கொடுக்கலாம். சிறு வயதில் மகிழ்ச்சியான நிகழ்வின் புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு ஆல்பமாக போட்டு பரிசாக கொடுக்கலாம். மேலும், இதில் நீங்கள் இருவரும் சிறுவயதில் இருக்கும் புகைப்படங்களையும் இணைத்து போட்டோ ஆல்பத்தை பரிசாக கொடுக்கலாம்.


மேக்கப் பொருட்கள்


பொதுவாகவே பெண்களுக்கு மேக்கப்பில் ஆர்வம் அதிகம். இதனால் மேக்கப் பொருட்களை உங்கள் சகோதரிக்கு பரிசாக கொடுக்கலாம். லிப் ஸ்டிக், பவுண்டர், கண்மை போன்றவைகளை இருக்கும் ஒரு காம்போவாக பரிசலிக்கலாம்.


ஸ்மார்ட் வாட்ச்


ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகளுக்கு வாட்ச் பரிசாக கொடுப்பது சிறந்த முடிவாகும். அவர்களுக்கு சாதாரண வாட்ச்க்கு பதிலாக ஸ்மார்ட் வாட்சை பரிசாக கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


சாக்லேட்


ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கயிறு கட்டும் சகோதரிகளுக்கு சாக்லேட் பரிசாக கொடுக்கலாம். இது உறவில் இனிமையான உணர்வை ஏற்படுத்தக்கூடும்.


நகைகள்


கம்மல், பிரஸ்லெட், வளையல் போன்ற நகைகளையும் பரிசாக கொடுக்கலாம். இது உறவில் தனித்துவமான பிணைப்பை உணர்த்தக்கூடும்.




மேலும் படிக்க 


Raksha Bandhan 2023: ரக்ஷா பந்தன் எப்போது? ராக்கி கட்டுவதற்கு நல்ல நேரம் எது? கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் என்ன?