தன் இளமைக் காலத்தில் தான் ராணுவத்தில் சேர விரும்பியதாகவும் ஆனால் குடும்ப சூழல், சிரமங்கள் காரணமாக சேர முடியவில்லை என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


மணிப்பூருக்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ராஜ்நாத் சிங், அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களிடம் முன்னதாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.


’குடும்ப சூழலால் முடியவில்லை’


"எனது சிறுவயது கதை ஒன்றை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன், அதற்கான தேர்வில் கலந்துகொண்டேன். எழுத்துத் தேர்வையும் எழுதினேன். ஆனால், என் குடும்பத்தில் நிலவிய சில சூழ்நிலைகள் காரணமாக, என் தந்தை இறந்ததால் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.


 






நீங்கள் பார்க்கலாம், ஒரு குழந்தையிடம் ராணுவ சீருடையைக் கொடுத்தால், அவரது ஆளுமையே மாறும். இந்த சீருடையில் ஒரு வசீகரம் உள்ளது” என்றார்.


தொடர்ந்து இந்தியா-சீனா மோதலின் போது பாதுகாப்புப் படையினர் வெளிப்படுத்திய வீரத்தை ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்தார்.


’ராணுவம் அனைத்தையும்விட மேலானது’


"இந்தியா-சீனா மோதல் நடந்து கொண்டிருந்த போது, ​​உங்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு தெரியும், அன்றைய ராணுவ தளபதிக்கு நமது ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சலும், தைரியமும் தெரியும், நாடு எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும்" என்றார்.


 






நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திப்பதை உறுதி செய்து கொள்கிறேன். எனது மணிப்பூர் பயணம் திட்டமிடப்பட்டபோது, ​​நான் இராணுவத் தலைவர் பாண்டேவிடம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் 57ஆவது மலைப் பிரிவின் ராணுவ வீரர்களை சந்திக்க விரும்புகிறேன் என்று கேட்டிருந்தேன்.


"மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் ஏதோ ஒரு வகையில் தேசத்துக்கு பங்காற்றுகிறார்கள் என்றாலும், உங்கள் தொழில் எந்த ஒரு தொழிலையும், சேவையையும் விட மேலானது என்று நான் நம்புகிறேன்" என்று திரு சிங் கூறினார்.




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!