பிறந்து சிறிது நேரமே ஆன பிஞ்சு குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் அவசர போக்குவரத்து சேவையை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை வழங்கி வருகிறது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. நகரத்திலிருந்து 250 முதல் 300 கிமீ சுற்றளவில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. 




நாடு முழுவதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதைச் செய்து வருகிறது ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை. தனிப்பயன்களுக்கான ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், இன்குபேட்டர், மானிட்டர், சிரிஞ்ச் பம்புகள் மற்றும் டிஃபிபிரிலேட்டர் ஆகியவை இந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையில் உள்ளன. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து அம்சங்களுமே இந்த ஆம்புலன்ஸில் உள்ளன.


அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்களே, இந்த ஆம்புலன்ஸில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மூன்றாம் நிலை பராமரிப்பு வசதிக்கு செல்லும் வழியிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக 15,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.




ரெயின்போ மருத்துவமனை, அவசரகால விமான போக்குவரத்து சேவையையும் வழங்கியுள்ளது. ராய்ப்பூர், கோவா மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளை ஏற்றிச் சென்று மருத்துவ சேவைகளை வழங்கப்படுகிறது. 


குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் சாதாரண வென்டிலேட்டரில் ஆக்சிஜனைப் பராமரிக்காத நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள குழந்தைகளை இப்போது வரை கொண்டு செல்ல முடியாது. இந்த குழந்தைகளுக்கு அதிக அதிர்வெண் காற்றோட்டம் மற்றும் உள்ளிழுக்கும் நைட்ரிக் ஆக்சைடு தேவை. 


ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, HFOV வென்டிலேட்டர் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு சப்போர்ட் சிஸ்டம் மூலம் தீவிர நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை கொண்டு செல்வதற்கான ஆம்புலன்சை நிறுவிய முதல் மருத்துவமனையாகும்.


மாவட்ட மருத்துவமனை ஒன்றில் மெஹ்ரீன் பாத்திமா என்ற குழந்தை, பிறந்தபோது ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், பிறந்த சில மணி நேரங்களிலேயே மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குழந்தைக்கு இதயக் கோளாறு இருப்பதாக சந்தேகித்த மருத்துவர்கள், உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள இருதய சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு, குழந்தையின் இதயத்தின் வலது பக்கம் மோசமாக செயல்படுவதை இருதயநோய் நிபுணர்கள் கண்டறிந்தனர். இதனால் குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. குழந்தைக்கு நிரந்தர நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் (PPHN) எனப்படும் தீவிர நிலை இருப்பது கண்டறியப்பட்டது. இது பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும்.


அதுமட்டுமின்றி, மருத்துவர்கள் குழந்தையின் இரண்டு நுரையீரல்களிலும் துளைகளைக் கண்டறிந்தனர். கூடுதல் சுவாச காற்றை வெளியிடுவதற்கு வடிகால் போட வேண்டியிருந்தது. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் நிரந்தர நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது புதிதாகப் பிறந்த குழந்தையை மிகவும் நோய்வாய்ப்படுத்துகிறது. 


பல நேரங்களில், அவர்கள் சாதாரண (வழக்கமான) வென்டிலேட்டருடன் குணமடைய மாட்டார்கள். மேலும் உயர் அதிர்வெண் வென்டிலேட்டர் (HFOV) மற்றும் உள்ளிழுக்கும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற சிறப்பு வகை வென்டிலேட்டர் தேவைப்படுகிறது.


ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் இருப்பது போல அட்வான்ஸ் லெவல் 4 NICU யூனிட் குழந்தைக்கு உடனடியாக தேவைப்பட்டது. அதோடு இரவு முழுவதும் நியோனாட்டாலஜிஸ்ட் (பிறந்த குழந்தகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்) ஆதரவும் தேவைப்பட்டது. 


இருப்பினும், சமீப காலம் வரை, இந்த வகையான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை கொண்டு செல்வது சவாலாக இருந்தது. ஏனெனில், போக்குவரத்தின் போது HFOV மற்றும் உள்ளிழுக்கும் நைட்ரிக் ஆக்சைடை வழங்கும் வசதி இந்தியாவில் இல்லை. 


ஏற்கனவே பிபிஹெச்என் நோயால் பாதிக்கப்பட்டு, எச்.எஃப்.ஒ.வியைப் பெற்ற குழந்தைகளை, போக்குவரத்தின் போது எச்எஃப்ஓவி வென்டிலேட்டர் இல்லாத நிலையில், மேம்பட்ட பிறந்த குழந்தை வசதிக்கு செல்லும் வழியில் மோசமடையக்கூடும் என்பதால், அத்தகைய குழந்தைகளை கொண்டு செல்ல முடியவில்லை. 


இச்சூழலில்தான், ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை நியோனாடல் டிரான்ஸ்போர்ட் டீம், இந்தியாவிலேயே முதன்முறையாக HFOV வென்டிலேட்டரை இன்ஹேல் செய்யப்பட்ட நைட்ரிக் ஆக்சைடைப் பயன்படுத்தி, இத்தகைய நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் காப்பாற்றியது.


ரெயின்போ நியோனாடல் ஐசியூவை அடைந்த பிறகு, அவருக்கு சர்பாக்டான்ட், எச்எஃப்ஓவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 3 நாட்களுக்கு நைட்ரிக் ஆக்சைடை உள்ளிழுத்து, அவரது நுரையீரல் துளைகள் குணமடைய உதவியது. அதிர்ஷ்டவசமாக, பெண் குழந்தையின் உடல் நிலை HFOV வென்டிலேட்டருடன் நைட்ரிக் ஆக்சைட் உதவியுடன் மேம்பட்டது.