ஆண்டு தோறும் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாததால் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதனை அடுத்து இன்று முதல் 5 நாள்களுக்கு காணொலி மூலமாக நடைபெறும். இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.  அதன் படி நேற்று காணொலியில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பேச்சை நிறுத்தி சில நிமிடங்கள் தயங்கி நின்றார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று பதிவிட்டு உள்ளார்.


 














முன்னதாக டெலிப்ராம்டர் உதவி இல்லாமல் பிரதமர் மோடியால் பேசவே முடியாது என ராகுல் காந்தி   கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.