கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை பயணத்தை இன்று ராகுல் காந்தி தொடக்கி வைத்து அதில் பங்கேற்கிறார்.
இந்த பயணத்திற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு வருகை புரிந்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், தந்தையின் நினைவிடத்தில் தியானம் செய்த ராகுல் காந்தி, சென்னை திரும்பி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு ஒற்றுமைப் பயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கி ஸ்ரீீநகர் வரையில் நடைபெறவுள்ள இந்த பயணம் 150 நாட்கள் நடைபயணமாக திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வழியாக 3,570 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகிறது.