போக்குவரத்து நெரிசலில் நிறைந்த நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மும்பை.உலகத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களின் பட்டியலில் மும்பை, பெங்களூரும் முதல் 10 இடத்தில் உள்ளது


 உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களில் பட்டியலில், இந்தியாவின் மும்பை டெல்லி மற்றும் பெங்களூரு இடம் பிடித்திருக்கிறது.இதில் மும்பை போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.


 இந்தியாவின் பொருளாதார கேந்திரமாக விளங்கும் மும்பையானது  மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமையகங்கள் மிகப்பெரிய தொழிற்சாலைகளின் தலைமையகங்கள் இந்தியாவில் முக்கியமான வி வி ஐ பி களின் இருப்பிடங்கள்  ஹாலிவுட் இணையான பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி சினிமா தொழில்துறையினரின் தலைமையகம் என சொல்லிக் கொண்டே போகலாம், மும்பையானது ஆகப்பெரிய  பிரதேசமாக காணப்படுவதால்  போக்குவரத்தும் மிக நெரிசலான நிலையில் உள்ளது.


உலகின் மிகவும் நெரிசலான நகரங்கள்:
வருடத்திற்கு 121 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில்  நேரத்தை இழக்கிறது மும்பை மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் மும்பை 53 சதவீதம் அதிகமாக உள்ளது.துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல், போக்குவரத்து நெரிசலில் ஆண்டுதோறும் 142 மணிநேரத்தை இழக்கும் உலகின் மிகவும் நெரிசலான நகரமாகும். உலகளாவிய ஆராய்ச்சியின்படி, போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு ஐந்தாவது இடத்தில் உள்ளது, ஆண்டுதோறும் 110 மணிநேரத்தை இழக்கிறது. மக்கள் அதிக நேரம் போக்குவரத்தில் கழித்த நகரங்களின் பட்டியலை பார்ப்போம்.


உலகின் மிகவும் நெரிசலான நகரங்களின் பட்டியல் :


இஸ்தான்புல் - போக்குவரத்தில் 142 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை – 62%


பொகோடா - 126  வருடாந்தர போக்குவரத்து நேரம்; நெரிசல் நிலை -55%


மும்பை- 121 வருட போக்குவரத்து மணிநேரம்; நெரிசல் நிலை- 53%


புக்கரெஸ்ட் - போக்குவரத்தில் 115 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை - 50% 


பெங்களூரு - 110 வருட போக்குவரத்து மணிநேரம்; நெரிசல் நிலை- 48%


புது தில்லி - 110 வருட போக்குவரத்து மணிநேரம்; நெரிசல் நிலை- 48%


Lodz - போக்குவரத்தில் 103 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை - 45%


டெல் அவிவ் - போக்குவரத்து நெரிசலில் 98 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை- 43%


டோக்கியோ- போக்குவரத்து நெரிசலில் 98 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை- 43%


மணிலா- போக்குவரத்தில் 98 ஆண்டு மணிநேரம்; நெரிசல் நிலை- 43%


2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் காரணமாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில், எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதால், உலகளாவிய நெரிசல் அதிகரித்துள்ளது. மும்பையின் நெரிசல் அளவு 53%. இதற்கு அடுத்து புது தில்லி மற்றும் பெங்களூரு (48%) உள்ளன.


நெரிசல் நிலை என்றால் என்ன? 


குளோபல் புவிஇருப்பிட தொழில்நுட்ப நிபுணரின் கூற்றுப்படி, நெரிசல் இல்லாத சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது ஒரு ஓட்டுநர் அனுபவிக்கும் கூடுதல் பயண நேரம் நெரிசல் நிலை சதவீதமாகும்.


50% நெரிசல் நிலை என்பது சராசரியாக, அடிப்படை நெரிசல் இல்லாத சூழ்நிலைகளை விட பயண நேரம் 50% அதிகமாக இருக்கும். இதன் பொருள், நெரிசல் அளவு 50% ஆக இருக்கும் போது, ​​30 நிமிட பயணத்திற்கு 15 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்வதை,  நெரிசல் நிலை என்கிறோம்.(30' x50% = 15').