Rahul Gandhi : வேளாண் சட்டம் போல அக்னிபத் முடிவுக்கு வரும்.. ராகுல் காந்தியின் லேட்டஸ்ட் கருத்து!

வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பபெற்றது போல இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னிபத் ராணுவ ஆட் சேர்ப்பு திட்டத்தை அவர் திரும்பப் பெறுவார்.

Continues below advertisement

வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பபெற்றது போல இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னிபத் ராணுவ ஆட் சேர்ப்பு திட்டத்தை அவர் திரும்பப் பெறுவார் என ராகுல் காந்தி சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 

தொடர்ச்சியாக கடந்த எட்டு ஆண்டுகளாக, ராணுவ வீரர்கள், விவசாயிகளின் நன்மதிப்பை பாஜக அரசு அவமதித்து வந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தெலங்கானா செகந்திராபாத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  ஒருவர் கொல்லப்பட்டார். ரயில்கள் எரிக்கப்பட்டன. பொது மற்றும் தனியார் வாகனங்கள் தாக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் போர்களமாக மாறியுள்ளன.

இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், "வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதேபோல், நாட்டின் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்" என பதிவிட்டுள்ளார். 

இந்திய ராணுவத்திற்கான செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிவித்தது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அக்னிபத் திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 17.5 வயது முதல் 23 வயது வரையிலான ஆண்களும் பெண்களும் அக்னி பாதை திட்டத்தில் சேரலாம். ஏற்கெனவே உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் பின்பற்றப்படும். 

அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும்.

4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola