RahulGandhi Reaction: நாட்டுக்காக போராடுகிறேன்... என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயார் - ராகுல்காந்தி திட்டவட்டம்

"இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். அதற்காக, என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ள நிலையில், ராகுல்காந்தி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

"இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். அதற்காக, என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா?

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஒன்று, இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட உடன், அவரை யாரும் தகுதி நீக்கம் செய்ய வேண்டாம். அவரின் எம்.பி. பதவி தானாக தகுதி நீக்கம் ஆகிவிடும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

ஆனால், சில சட்ட வல்லுநர்கள், வேறு விதமான கருத்துகளை முன்வைக்கினர். தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து தகுதி நீக்க நடவடிக்கையை தள்ளி போடலாம் என கூறுகின்றனர்.

காலியானதாக அறிவிக்கப்படும் வயநாடு தொகுதி:

இனி, அவரின் வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். இதையடுத்து, அங்கு தேர்தல் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக, மத்திய டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்தி கேட்டு கொள்ளப்படுவார்.

1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதேனும் குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அதே தருணத்திலேயே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" என கூறுகிறது. 

அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக ராகுல்காந்திக்கு பிணை வழங்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரை தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு காரணமாக மாறியுள்ளது.

ராகுல் காந்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை:

இனி, தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து ராகுல்காந்தி நீதிமன்றத்திற்கு செல்லலாம். இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், "தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு குடியரசு தலைவரால் மட்டுமே எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யலாம்" என கூறியுள்ளனர்.

வைக்கப்படும் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள பாஜக எம்பி மகேஷ் ஜெத்மலானி, "சட்டத்தின்படி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த முடிவு பற்றி சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலைமையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பியே" என்றார்.

மக்களவை பதவியிலிருந்த் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், “ராகுல் நாடாளுமன்றம் மற்றும் அரசியல் வாழ்க்கையில் அச்சமின்றி சரியான தனது கருத்துக்களைத் தெரிவித்து வருவது நாம் அறிந்ததே! அது ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

Continues below advertisement