சிலரின் லாபத்துக்காக போலியான கருத்து கணிப்புகளால் 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பங்குச் சந்தையில் முறைகேடு:
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, தேர்தல் முடிவு வந்த நிலையில் எல்லோரும் உறைந்து போயிருக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது. போலியான கருத்துக் கணிப்புகள் மூலம், இந்த இழப்புகள் ஏற்பட்டன.
போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்கள் விசாரிக்க வேண்டும் . கருத்துக் கணிப்புகளுக்கு பிறகுதான் பங்குச் சந்தைகள் உயர்ந்தன. பங்குச் சந்தை முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு தேவை
பிரதமர், உள்துறை அமைச்சர் உதவியுள்ளனர்”
“தேர்தலின் போது, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததை, இப்போதுதான் முதல்முறையாகக் பார்க்கிறேன். அப்போது, பங்குச் சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 அன்று பங்குச் சந்தை உயரும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதிக்கு முன் பங்குகளை வாங்குங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். சிலர் பணம் சம்பாதிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதவியுள்ளனர்.
வெளிநாட்டு தொடர்பு;
"பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையை வழங்கியது ஏன்? முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா?
பாஜகவுக்கும், போலியான கருத்துக்கணிப்பாளர்களுக்கும் என்ன தொடர்பு? எக்சிட் போல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு முதலீடு செய்து, பெரும் லாபம் ஈட்டிய சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? என ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்