இந்தியாவின் முன்னணி தொழில் குழுமம் பஜாஜ். பஜாஜ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முன்னணி தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமம் பஜாஜ். பஜாஜ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முன்னணி தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவு தொடர்பாக பஜாஜ் குழுமம் வௌியிட்ட செய்திக்குறிப்பில், ராகுல் பஜாஜ் காலமானார் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ராகுல் பஜாஜ் 1938ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி பிறந்தவர். பஜாஜ் குழுமத்தின் தலைவராக 40 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பஜாஜ் குழும சேர்மன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராகுல் பஜாஜ் நிமோனியா மற்றும் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் 2.30 மணிக்கு காலமானார். ராகுல் பஜாஜ் நாட்டிற்கு ஆற்றிய சேவையை பாராட்டி நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருது 2001ம் ஆண்டு வழங்கப்பட்டது.
ராகுல் பஜாஜின் தாத்தா ஜம்னாலால் பஜாஜ் பஜாஜ் குழுமத்தை 1926ம் ஆண்டு உருவாக்கினார். அவரது தந்தை கமல்நயன் 1942ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை தொடங்கினார். ராகுல் பஜாஜ் 1958ம் ஆண்டு பாம்பே பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், 1968ம் ஆண்டு பஜாஜ் குழுமத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றார்.
2008ம் ஆண்டு அவர் பஜாஜ் ஆட்டோவை பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் நிதி நிறுவனம் உள்பட மூன்று நிறுவனமாக பிரித்தனர். அவருக்கு ராஜூவ் பஜாஜ், சஞ்சீவ் பஜாஜ் என்ற இரு மகன்களும், சுனைனா பஜாஜ் என்ற மகளும் உள்ளனர். 1986ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாக பொறுப்பு வகித்தார். 2006ம் மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்