பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர் கேப்டன் அம்ரீந்தர் சிங். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பஞ்சாப் மாநில முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார். புதிய முதல்வராக அம்ரீந்தர் சிங் வாழ்த்து தெரிவித்தாலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியையும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவையும் கடுமையாக விமர்சித்தார்.




இந்த நிலையில், முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் இன்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினாலும் தான் காங்கிரஸ் கட்சியில்தான் நீடிப்பதாக அம்ரீந்தர் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.