கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் புதன்கிழமையன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், அரசியல் சாசனம் குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய மறு நாள் கழித்து, அது கேரளாவில் பெரும் அரசியல் குழப்பத்தைத் தூண்டியது. இதை அடுத்து அவர் தற்போது அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்,


“நான் ராஜினாமா செய்துள்ளேன், இது எனது தனிப்பட்ட முடிவு. அரசியலமைப்பை நான் ஒருபோதும் அவதூறு செய்ததில்லை. சிபிஐ-எம் மற்றும் எல்.டி.எஃப்-ஐ பலவீனப்படுத்துவதற்காக இந்த உரையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி எடுக்கப்பட்டு ஊடகங்களால் புனையப்பட்டது" என்று செரியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






இது தொடர்பாக வெளியான செய்திகள் திரிபுபடுத்தப்பட்டதாக அமைச்சர் சஜி செரியன் வருத்தம் தெரிவித்திருந்தார்.


காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், செரியனின் கருத்துகளை 'அருவருப்பானது' என்று வர்ணித்த நிலையில், பிஜேபி, அவர் அரசியல் சாசனத்தால் செயல்படுத்தப்பட்ட ஒரு அலுவலகத்தை அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் இந்த இரண்டு கட்சிகளும் வெளியிட்ட கருத்தை அடுத்து அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். 







திங்கள்கிழமை பத்தனம்திட்டாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய செரியன், அரசியலமைப்புச் சட்டத்தைக் கண்டித்து, அது சுரண்டலுக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது என்றார்.


"இது ஒரு அழகான அரசியலமைப்பு என்று நாம் அடிக்கடி கூறுகிறோம். ஆனால் நாம் பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுத்து அரசியலமைப்பை எழுதினோம். அது சுரண்டலுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் வழங்காது. இது சாமானியர்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் கொள்ளையடிக்க உதவுகிறது” என்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியில் செரியன் கூறினார்.


"அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய சொற்றொடர்களைச் சேர்ப்பதன் மூலம் அதை அழகாக மாற்றுவதற்காக அங்கும் இங்கும் சேர்க்கப்பட்டு புணையப்பட்டுள்ளது. ஆனால் அது சுரண்டல் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. 75 ஆண்டுகளாக நாம் பெருமையுடன் இந்த முறையைப் பின்பற்றி வருகிறோம், ”என்று மேலும் அவர் கூறினார்.


கேரள அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகக் கருதப்படும் சஜி செரியனின் ராஜினாமா தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.