இந்தியாவின் முக்கியமான சுற்றுலா மாநிலமாக திகழ்வது புதுச்சேரி. இங்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அடிக்கடி சுற்றுலா வருவது வழக்கம். இந்த நிலையில், புதுச்சேரி போலீசார் தங்களது உடை குறித்து பேசியதாக இளம்பெண் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், காவல்துறையினருடன் பேசும் வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




புதுச்சேரிக்கு ஹைதரபாத்தைச் சேர்ந்த பிரணிதாசண்டேளா என்ற இளம்பெண் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது, அவர் அங்கு அமைந்துள்ள ஆரோபிந்தா ஆஸ்ரமம் அருகே நண்பர்களுடன் புகைப்படம் எடுத்தபோது, புதுச்சேரி போலீசார் இங்கே புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும், முறையாக உடையணியவில்லை என்றும் கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.






இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் சாதாரணமாக என் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். நான் சரியாக உடை அணியவில்லை என்று புதுச்சேரி போலீசார் கூறினர். மேலும், என்னிடம் எப்படி ஆடை அணிய வேண்டும் என்றும் பாடம் எடுத்தனர். அவர்களில் ஒரு போலீசார் எனது குணம் குறித்து கேள்வி எழுப்பினார் என்று பதிவிட்டுள்ளார்.




இந்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி காவல்துறையினர் அந்த பெண் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,  “நாங்கள் ஒருபோதும் அவர்களது உடை பற்றி எந்த கேள்வியும், கருத்தும் கூறவில்லை. இது சுற்றுலா பகுதி. அதனால், நாங்கள் யாருடைய உடை பற்றியும் கருத்து தெரிவிக்கவில்லை.


ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஆரோபிந்தோ பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தது. அவர்கள் பள்ளி முடியும் நேரம் என்பதால், பள்ளி மாணவர்கள் அந்த வழியே வருவார்கள். அதனால், அவர்களை வேறு இடங்களில் புகைப்படம் எடுக்க சொல்லுங்கள் என்று கூறியிருந்தனர். அதன் அடிப்படையிலே அவர்களை வேறு இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம்” என்று கூறியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண