பாதுகாப்பு படைகளின் ஆட் சேர்ப்பு திட்டமான அக்னிபாத் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாளே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. தங்களை அரசு முட்டாள்களாக்குவதாக இளைஞர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். 


அக்னிபாத்


பீகாரில் உள்ள முஸாபர்பூர் மற்றும் பக்சரில் புதன்கிழமையன்று போராட்டம் வெடித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.






 


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது.


அக்னிவீர் திட்டத்தில் சேருபவர்களுக்கு ராணுவம் 12 முதல் 10 ஆம் வகுப்பு சான்றிதழ்கள் வரை வழங்க முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. இந்த புதிய திட்டத்திற்கு மூத்த ராணுவ வீரர்கள் உள்பட பல்வேறு முனைகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது வீரர்கள் மத்தியில் போராடும் குணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் துணிந்து செயல்படுவதை தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 






 


இதுகுறித்து பிகாரை சேர்ந்த குல்சான் குமார் பேசுகையில், "வெறும் நான்கு ஆண்டுகள் பணி என்பதன் பொருள், அதன் பிறகு வேறு வேலைகளுக்கு செல்ல படிக்க வேண்டும். எங்களுடைய வயதில் இருப்பவர்களை விட நாங்கள் பின்தங்கியவர்களாக இருப்போம்" என்றார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்ய போகிறோம் என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


ராணுவத்தில் சேர விரும்பு அதற்கு தயாராகி வரும் சிவம் குமார் இதுகுறித்து கூறுகையில், "இரண்டு வருடங்களாக ஓடி ஓடி என்னை உடல் ரீதியாக தயார்படுத்தி வருகிறேன். நான்கு வருடங்கள் மட்டுமே இருக்கும் வேலையை நான் எடுக்க வேண்டுமா?" என்றார்.


அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ராணுவ திட்டம், அளிக்க வேண்டிய ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் பெரிய அளவு குறைக்கவுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பணத்தை கொண்டு ஆயுதங்களை வாங்க திட்டம் வழிவகை செய்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண