மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தேர்தல் ஏப்ரல் 26, 2024 இன்று நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த பின்னணியில், பிரியங்கா காந்தியின் தேர்தல் பேரணிக்கு முன்னதாக, பெங்களூருவில் தங்கள் விளம்பர பதாகைகளில் காங்கிரஸ் மூவர்ண கொடியை தலைகீழாக பயன்படுத்தியதாக வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, வத்ரா பகுதியில் பேரணியின் போது வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளில் மூவர்ண கொடியை தலைகீழாகக் காட்டப்படுகின்றன. மேலே பச்சை நிறத்துடன் இருக்கிறது" என பதிவிட்டு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த செய்தியின் உண்மை குறித்து ஆராய்ந்தோம். இது குறித்து தேடியபோது, ஃபர்ஸ்ட் போஸ்ட் ஆங்கில செய்தி இணையதளம் “மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தேசியக் கொடியை அவமதிக்கும் பிரியங்கா காந்தியின் விளம்பர பதாகைகளில் மூவர்ணக் கொடியை தலைகீழாக இருப்பதை காட்டுகிறது என்ற தலைப்பில் கட்டுரையைக் கண்டோம்.
பதாகைகளில் மூவர்ணக் கொடி தலைகீழாக இருப்பது வைரல் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் ஸ்கிரீன் ஷாட்களும் கட்டுரையில் பகிரப்பட்டது.
இந்த செய்தி வெளியிடப்பட்ட தேதியானது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆகும். இதிலிருந்து, நாம் அறியலாம், இந்த நிகழ்வானது, தற்போதைய மக்களவை தேர்தலின் போது இது நடைபெறவில்லை என அறிய முடிகிறது.
எனவே , சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்துக்கு சென்ற போது தேசிய கொடி தலைகீழாக இருந்தது என பரப்பப்படும் வீடியோ உண்மையல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
சமூக வலைதளங்களில் பல பொய் செய்திகள் பரவி வருகிறது. எந்தவொரு செய்தியையும் பகிர்வதற்கு முன்னர், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பகிரவும். பொய் செய்தியாக இருந்தால் பகிர வேண்டாம், அந்த பதிவை ரிப்போர்ட் செய்யுங்கள்.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Fact crescendo என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.