1950 மற்றும் 2015 க்கு இடையில் 167 நாடுகளில் உள்ள மக்கள்தொகையின் மத அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவில், பெரும்பான்மையான இந்து மக்களின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது என்றும் இஸ்லாமிய மக்கள் தொகை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது என  பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) அதன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.  

இந்தியாவில் உள்ள அனைத்து மத சிறுபான்மையினரும், ஜெயின் மற்றும் பார்சிகள் தவிர, இந்த காலகட்டத்தில் மக்கள்தொகை சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான –பதிவில், "பெரும்பான்மையான மக்கள்தொகையில், மியான்மருக்கு (10%) அடுத்த தெற்காசிய சுற்றுப்புறத்தில் இந்தியா இரண்டாவது குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது, அதேபோல், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினர் மக்கள் தொகை குறைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த ஆய்வின்படி, 1950-ஆம் ஆண்டில், இந்த நாடுகளில் பெரும்பான்மையான மதக்குழுவின் சராசரி பங்கு 75 சதவீதமாக இருந்தது. 2015-ஆம் ஆண்டில், இது தோராயமாக 22 சதவிகிதம் குறைந்துள்ளது. உதாரணமாக, 1950-ஆம் ஆண்டில் முக்கியமாக ஆனிமிசத்தைப் (animism) பின்பற்றிய மக்கள் தொகை தற்போது நடைமுறையில் இல்லை.  இது மதப் பின்பற்றுதலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

கிறித்தவப் பெரும்பான்மை கொண்ட 94 நாடுகளில், 77 நாட்டில் மக்கள் தொகை குறைந்துவிட்டதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மாறாக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அதன் மக்கள் தொகை சதவீதத்தில் வளர்ச்சிக் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  65 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பான்மையான இந்து மக்கள் தொகையில் 7.82 சதவிகிதம் சரிவை கண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.  1950 இல் 84.68 சதவிகிதத்தில் இருந்து 2015 இல் 78.06 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உட்பட இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட அண்டை நாடுகளின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதே காலகட்டத்தில், இஸ்லாமிய மக்கள்தொகை பங்கு 9.84 சதவீதத்திலிருந்து 14.09 சதவீதமாக அதிகரித்து, 43.15 சதவீதமாக குறிப்பிடத்தக்க உயர்வைக் எட்டியுள்ளது. கிறிஸ்தவர்களும் 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதமாக அதிகரித்து, 5.38 சதவீத வளர்ச்சியைப் அடைந்துள்ளனர். சீக்கியர்கள் 1.24 சதவீதத்திலிருந்து 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளனர், இது 6.58 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.

பௌத்த மக்கள்தொகை பங்கு 0.05 சதவீதத்திலிருந்து 0.81 சதவீதமாக அதிகரித்துள்ளது என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  

நாடு

பெரும்பான்மையான மதம்

1950 -இல் இருந்த மக்கள் தொகை

2015 இல் மக்கள் தொகை  

இந்தியா

இந்து

84.68

78.06

பாகிஸ்தான்

இஸ்லாம்

77.45 

80.36 

 இலங்கை

பௌத்தம மதம்

64.28

67.65

வங்காளதேசம்

இஸ்லாம்

74.24

88.02

நேபாள்

இந்து

84.30 

81.26

சீனா

சீன மக்கள்

51.50 

21.01

பூடான்

பூடான் பௌத்தம மதம்

71.44

84.07

ஆப்கானிஸ்தான்

இஸ்லாம்

88.75 

89.01 

மாலத்தீவு

இஸ்லாம்

99.83 

98.36