✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

PM Modi Department: அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் பிரிச்சாச்சு! பிரதமர் மோடிக்கு என்னென்ன துறைகள் தெரியுமா?

செல்வகுமார்   |  10 Jun 2024 11:59 PM (IST)

PM Modi Department:பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவருக்கு விண்வெளி உள்ளிட்ட பல துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி,

PM Modi Department: பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 

புதிய அமைச்சரவை:

18வது மக்களவைத் தேர்தலானது ஏப்ரல் மாதம் 19 தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்தியில் மீண்டும் ஆட்சியைமப்பதற்காக மோடி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து உரிமை கோரினார்.

இதையடுத்து மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார். மீண்டும் பாஜக ஆட்சி: மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றதால் ஆட்சியமைக்கும் உரிமையை பாஜக கூட்டணி பெற்றது. 

இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் பொறுப்பை ஏற்றது. நேற்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி உட்பர் 72 அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில், தற்போது அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டவர்களுக்கு, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

பிரதமர் மோடியின் துறைகள்:

அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அமைச்சகம் மற்றும் துறைகள் எவை என்பதை பார்ப்போம். 

  • இந்திய அரசின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்
  • அணுசக்தி துறை
  • விண்வெளி துறை
  • அனைத்து முக்கிய கொள்கை சார்ந்த பிரச்னைகள்
  • இதர, யாருக்கும் ஒதுக்கப்படாத இலாக்காக்கள் 

இவை அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு உள்ளவராக பிரதமர் மோடி உள்ளார். 

இதர முக்கிய அமைச்சர்கள்:

பாஜகவின் மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்குக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அமித் ஷாவுக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் கடந்த பதவிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட அதே துறைகள் இந்த முறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும் தொடர்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகவும, எஸ். ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் தொடர்கிறார். பாஜகவின் மூத்த தலைவரான நிதின் கட்காரிக்கும் கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே துறை இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக தொடர உள்ளார்.

Also Read: நிர்மலாவுக்கு நிதி.. அமித் ஷாவுக்கு உள்துறை..ராஜ்நாத்துக்கு பாதுகாப்பு.. முக்கிய துறைகள் யாருக்கு?

Also Read: PM Modi Cabinet: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு - யாருக்கு எந்த பொறுப்பு?

Published at: 10 Jun 2024 10:05 PM (IST)
Tags: space Prime Minister PM MODI NARENDRA MODI departments atomic
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • PM Modi Department: அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் பிரிச்சாச்சு! பிரதமர் மோடிக்கு என்னென்ன துறைகள் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.