உலக தியான தினமான இன்று தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தியானம் என்பது ஒருவருடைய வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் உலகிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.



அட்வைஸ் கொடுத்த பிரதமர் மோடி:


சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவும், வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதை அனுபவிக்கவும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.


 






தியானம் என்பது ஒருவரின் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். அதே போல், நமது சமூகத்திற்கும் உலகுக்கும் தொழில்நுட்ப யுகத்தில், தியானத்தை நமது தினசரி வாழ்க்கை முறையில் இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக செயலிகள் மற்றும் வீடியோக்கள் இருக்கின்றன" என பதிவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?