5ஜி ஏலம் நடந்து முடிந்துள்ள நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான செலவையும், அதனை அமல் படுத்துவதற்கு ஆகப்போகும் செலவையும் ஈடுகட்டும் விதமாக 5ஜி சேவையின் விலையை கடுமையாக நிர்ணயிக்க நேரிடும் அதற்காக புதிய யுக்தியுடன் களமிறங்கும் என்றும் அதுவும் வாடிக்கையாளர்களுக்கு தான் தலைவலி என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.


4ஜி டு 5ஜி யுக்தி


நடந்து முடிந்த ஏலத்தில் அதிக தொகை செலவு செய்துவிட்டதாலும், இதனை அமல் படுத்துவதற்கான செலவும் உள்ளதானாலும், அந்த செலவுகளை ஈடுகட்டும் விதமாக, தொலைபேசி மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணத்தை, மீண்டும் ஒருமுறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரிக்க கூடும். உடனடியாக 5ஜி சேவை கொண்டுவரும்போது, ஏற்கனவே உள்ள 4ஜி சேவைக்கும் அதற்கும் இடையே உள்ள கட்டணத்தில் வித்தியாசம் அதிகமாக இருந்தால், மக்கள் எளிதில் மாற தயங்குவார்கள். எனவே, 4ஜி சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சிக்கும். அப்படி அதிகரித்து பின்னர் 5ஜி கொண்டுவரும்போது பெரிய அளவில் கட்டண வித்தியாசம் இருப்பதாக தெரியாது. இந்த யுக்தியை பயன்படுத்துவார்கள் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



4ஜி கட்டண உயர்வு


தற்போதைய 4ஜி சேவைக்கான கட்டண உயர்வை பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான்கு சதவீத உயர்வை நிறுவனங்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது. நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி 4ஜி சேவைக்கான கட்டணத்தில் 30 சதவீகித உயர்வு இருக்கலாம். அந்தந்த நிறுவனங்களை பொறுத்து, இந்தஸ் கட்டண உயர்வு குறித்த முடிவுகள் மாறுபடும், ஆனால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


ஸ்பெக்ட்ரம் செலவு


நடந்துமுடிந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிக விலைக்கு ஏலத்த்தை எடுத்துள்ளதால், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட அதிகமாக விலையை உயர்த்த வேண்டியிருக்கும். SUC சேமிப்பிற்குப் பிறகு, ஜியோவின் ஸ்பெக்ட்ரம் செலவினம் ரூ. 5,290 கோடியாக இருக்கும், இது பார்தி ஏர்டெல் செலவழித்த ரூ.1,430 கோடி மற்றும் Vi செலவழித்த ரூ.720 கோடியை விட பலமடங்கு அதிகமாகும்.



5ஜி விலை என்னவாக இருக்கும்?


4ஜி விலையேற்றம் முடிந்த பின்பு சில மாதங்களில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும். அப்போது ஏர்டெல், விஐ ஆகியவை தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 2 சதவிகிதம் அதிகரிக்க நேரிடும், அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ செய்த செலவை சமன் செய்ய 7 சதவீதம் அதிகரிக்க வேண்டி இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


அரசுக்கு வருமானம்


10 அலைவரிசைகளில் வழங்கப்பட்ட 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில், 51,236 மெகா ஹெர்ட்ஸ் விற்கப்பட்டுள்ளது, அதாவது 71 சதவீதம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை மக்கள் பயன்படுத்துவதன் மூலம், முதல் ஆண்டில் 13,365 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வரும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.