President Ramnath Kovind : சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான்.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உருக்கம்..
சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறேன் என்றும் அதற்கு துடிப்பான ஜனநாயக அமைப்புக்கு தலைவணங்குவதாகவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறேன் என்றும் அதற்கு துடிப்பான ஜனநாயக அமைப்புக்கு தலை வணங்குவதாகவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இன்றோடு அவரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், "நாடு முழுவதும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாடப்படுகிறது. அடுத்த மாதம், 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம்.
Just In




சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவுக்கு இன்னும் 25 ஆண்டுகளே உள்ளன. எனவே, ‘அமிர்த கால்’ அதாவது சுதந்திரத்தின் நாற்றாண்டுக்கு நம்மை அழைத்து செல்லும் 25 ஆண்டு காலப்பகுதிக்கு செல்கிறோம். நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாசாரத்தின் சிறப்பு.
சொந்த கிராமம், நகரம், தங்களின் பள்ளி, ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர நான் இளைய தலைமுறையினரை கேட்டுக்கொள்கிறேன். ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த நமது துணிச்சலான வீரர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை நான் குறிப்பாகப் போற்றுவேன்.
அவர்களின் தேசபக்தி வியக்கத்தக்கது, அது ஊக்கமளிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நாம் பெற்ற ஒவ்வொருவரு தலைவர்களும் சிறப்பான சிந்தனையாளர்களாக இருந்தனர். இந்த அதிர்ஷ்டசம் இந்தியாவைப் போல் வேறு எந்த நாட்டுக்கும் கிடைக்கவில்லை என்று நான் எப்போதும் உறுதியாக நம்புகிறேன்.
5 ஆண்டுகளுக்கு முன்பு உங்களின் மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். குடியரசு தலைவராக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உங்களுக்கும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த நான், இன்று நாட்டுமக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
குடியரசு தலைவராக இருந்தபோது எனது சொந்த கிராமத்திற்குச் சென்று நான் படித்த கான்பூர் பள்ளியில் உள்ள வயதான ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றது என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்