குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அரசு முறை பயணத்தை முடித்து கொண்டு இன்று (08/08/2023) மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். 


தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 5-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கதிரியக்க சிகிச்சை உபகரணத்தைத் திறந்து வைத்தார். ஆயுஷ் மருத்துவமனைகளையும் திறந்து வைத்தார்.


இந்நிலையில் நான்கு நாள் அரசுமுறை பயணத்தை முடித்து கொண்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.


சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா


பாரம்பரியம் மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டங்களை வழங்கினார்.


பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பேசும்போது, ”எனக்கு முன்னாள், குடியரசுத் தலைவர்கள் 6 பேர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து பெருமை சேர்த்துள்ளனர். பாலின சமத்துவத்திற்கான கோயிலாக சென்னை பல்கலைக் கழகம் விளங்குகிறது. சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. எந்தவொரு கவலையிலும் நீங்கள் மூழ்கிவிடக்கூடாது என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும், உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். தேசம் மற்றும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் சந்திப்பு


நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்குட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக இருந்து வரும் பொம்மன், பெள்ளி தம்பதியினரின் வாழ்க்கை குறித்த எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படமான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்குட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக இருந்து வரும் பொம்மன், பெள்ளி தம்பதியினரின் வாழ்க்கை குறித்த எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படமான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. 


இந்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதிக்கு சென்றார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றடைந்தார். அங்கு இருந்த வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள் ஊட்டி மகிழ்ந்த திரெளபதி முர்மு, பொம்மன், பெள்ளி தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது குட்டியானை பொம்மிக்கு கரும்புகளை உண்ணக் கொடுத்தார். மேலும் தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிட்டார்.


புதுச்சேரி பயணம்


புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆரோவில் சர்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணி வருகை தந்தார். 


குடியரசுத் தலைவருக்கு ஆரோவில் அறக்கட்டளை சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்திர்மந்திருக்குச் சென்று தியானம் மேற்கொண்டார். அரவிந்தரின் 150-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.