பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) – இந்தப் பெயர் இந்தியா அறிந்ததுதான். தேர்தல் வியூகம் வகுப்பத்தில் கைத்தேர்ந்தவர். தேசிய கட்சிகள் தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமானதாக மாற்றுவதற்கு யுக்திகளை வழங்கியவர். பா.ஜ.க.வின், வெற்றி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு இவருடைய ஆலோசனையும், தேர்தல் வியூகங்களும் பெரிதும் உதவியாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாததே!
இப்படியிருக்க, இந்தியாவின் பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் சந்திக்கும் தேர்தலில் எல்லாம் படுதோல்வியை சந்தித்து வருகிறது என்பது தற்போதைய அரசியல் சூழலில் உற்றுக் கவனிக்கப்பட்டு வருகிறது. தொடர் தோல்விகள், கட்சியில் சரியான தலைமை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் அரசியல் களத்தில் காங்கிரஸால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கையில், அதை களைய கட்சி திட்டமிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் அணுகுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் உடன் 2021-இல் நடந்த பேச்சு வார்த்தை வெற்றியில் முடியவில்லை என்றாலும், இந்த முறை நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் காங்கிரஸுக்கு ஏற்பட்ட அனுபவம் பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை செய்யும் அளவிற்கு தள்ளியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போதைக்கு, காங்கிரஸின் செயல்பாடுகள், மக்களிடம் அவர்களுக்கான ஆதரவு என்பதெல்லாம் பெரிதாக இல்லை. சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முடிவுகளில் இருந்து நாமே சொல்லிவிடலாம், காங்கிரஸ் தனது எதிர்கட்சி என்ற அந்தஸ்தை விரைவில் இழப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறதென்று. இந்த மோசமான நிலையில்தான், கடந்த நான்கு நாட்களில் மூன்று முறை நடந்திருக்கிறது பிரசாந்த் கிஷோர்- காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு! இதன்மூலம், காங்கிரஸ் கட்சி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தேர்ததில் முழுகவனம் செலுத்த ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என எடுத்துக்கொள்ளலாம்.
ஏப்ரல் 16-ம் தேதி சோனியா காந்தியின் நம்பர்,10, ஜன்பத் இல்லத்துக்கு பிரசாந்த் கிஷோர் வந்தபோது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. ராகுல் காந்தியும் அருகே இருக்க, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 10 பேர் முன்னிலையில் விரிவான பவர் பாயின்ட் பிரசன்டேஷன் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இதில், 2024-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கியிருக்கிறார், பிரசாந்த்.
மேலும், பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைய அழைப்பு விடுத்திறது காங்கிரஸ். பிரசாந்த் கிஷோர் கட்சியின் ஆலோசராக மட்டுமே இருந்திடாமல், கட்சியின் அங்கமாக இருக்க வேண்டும் என்பது காங்கிரஸின் ஒரு பிரிவினரின் விருப்பமாக இருக்கிறது. இது சாத்தியமானால், பிரசாந்த் கிஷோருக்கு எந்த மாதிரியான பொறுப்பு வழங்க்கப்படும்? காங்கிரஸ் பிரசாந்த் கிஷோரை தங்களுடன் இணைத்துக்கொள்வதற்கான அவசியங்களும் காரணங்களும் என்ன என்பது பற்றி அலசுகிறது The Quint-இல் வெளியாகியிருக்கும் கட்டுரை ஒன்று. அது என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
காங்கிரஸ் மனமாற்றம்: ஏன்? எதற்கு? எப்படி?
"பிரசாந்த் கிஷோரின் இரண்டாவது வருகைக்கு தயாராக இருங்கள்" என்று ஒரு காங்கிரஸ் தலைவர் தி குவிண்ட் செய்தியாளரிடன் வாய்ஸ் மெஜேஸ் மூலம் மார்ச் 10 ஆம் தேதி கூறியிருந்தார். இதில், இரண்டாவது எதைக் குறிக்கிறது என்பது பற்றியெல்லாம் அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. இருப்பினும், தற்போதைக்கு, இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பிரசாந்த் கிஷோரை நாடுவதற்கு கட்சிக்குள் கணிசமான அளவு சிந்தனை ஏற்பட்டுள்ளது என்றே சொல்வது பொருத்தமாக இருக்கும்.
”எங்களுக்கு உதவி தேவை. எங்கள் அமைப்பு மற்றும் எங்கள் சிந்தனையில் ஒரு பெரிய மாற்றம் தேவை," ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைக்கும் ஒரு தன்னார்வளரின் கூற்று இது.
காங்கிரஸ் சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட இவர், பிரசாந்த் கிஷோருடனான எந்தவொரு செயல்பாட்டையும் கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். பிரசாந்த் கிஷோரை “ "having zero convictions." என்று குற்றம்சாட்டியவர். அதாவது தன் திட்டங்களை செயல்படுத்தில் எவ்வித சமரசமும் செய்யாதவர் பிரசாந்த் என்பது அவரின் கருத்து. ஆனால், ஒரு தன்னார்வலர் தற்போது, தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டார். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ளவர் என்றில்லை. கட்சியில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்சியில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக ஏற்பட்டுள்ளது. இதன் வெளிபாடுதான், காங்கிரஸ் மீட்சி பெற பிரசாந்த் கிஷோரை தன் பயணத்தில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. மேலும், எதிர்வரும் தேர்தலில் பங்கேற்ற பிரசாந்த் கிஷோரையே நம்பியுள்ளது எனலாம்.
பிரசாந்த் கிஷோர்- காங்கிரஸ் கடந்த வந்த பாதை:
காங்கிரஸ் – பிரசாந்த் கிஷோர் இடையேயான பேச்சுவார்த்தை நடப்பது இதுவொன்றும் முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2017-இல் நடந்த உத்ர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து செயலாற்றியது. அப்போது, கிஷோர் முன்வைத்த சில ஐடியாக்கள் காங்கிரஸ் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின. பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரை தேர்தல் பரப்புரைகளில் அதிகமாக ஈடுப்பட செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காங்கிரஸ் பெரிய நோ சொன்னது. இருவரும் இணைந்து களத்தில் ஜொலிக்க தவறியது. இதற்கு பிரசாந்த் கிஷோர், என் கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், நான் இதற்கு பொறுப்பேற்க முடியாது என்றார். அதாவது, காங்கிரஸில் இவர் சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை என்பதை நேர்காணலில் கூறினார்.
அடுத்து, 2020-இல் பிரசாந்த் கிஷோர் கட்சியின் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் காங்கிரஸ் கட்சியை சந்தித்தார். ஆனால், இவரின் திட்டங்களும் காங்கிரஸின் எண்ணமும் ஒத்துப்போகாததால், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கருத்துகளில் ஏற்பட்ட முரண்பாடுகளால் வெகுநாட்களுக்கு இருவருக்கு இடையிலான உறவு கசந்தது. ஆனால், பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியுடன் பேசுவதை நிறுத்திவிடவில்லை. இருவருக்கும் இடையில் நல்லமுறையிலான உறவே நீடித்து வருகிறது.
அதிரடியான மாற்றங்கள் வேண்டும் என்கிறார் பிரஷாந்த். ஆனால், காங்கிரஸிற்கு இதில் உடன்பாடில்லை. இதனாலேயே பிரஷாந்த் கிஷோர் உடன் காங்கிரஸ் உடன்பட எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இடைப்பட்ட ஆண்டுகளின், பிரஷாந்த் காங்கிரஸில் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார். அதோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் என்னென்ன மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், கட்சியின் பலவீனங்கள் என்ன? என்பது பற்றி பேசியிருக்கிறார்.
முரண்பட்ட இருவரும் ஒன்றிணைய முக்கிய காரணம், பிரஷாந்தின் அதிரடியான திட்டங்களை காங்கிரஸ் ஏற்க மறுத்தாலும், பிரஷாந்த் சொல்லும் சிக்கல்கள், பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பதை பலரும் உணர்ந்தனர்.
மேலும், பிரசாந்த் கிஷோர் பல்வேறு நேர்காணலில் காங்கிரஸ் பற்றி முன் வைக்கும் கருத்து, காங்கிரஸில் கருத்துகளும், அரசியல் களத்தில் அதன் பங்களிப்பும் ஒரு எதிர்கட்சிக்கு முக்கியமானது என்பதாகும்.
கடந்த கால கசப்புகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறது காங்கிரஸ். அதற்கு சரியான தேர்வாக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்றும் நம்புகிறது காங்கிரஸ்.
ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் விளைவு:
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் கடும் தோல்வியை சந்தித்தப்பின் விளைவு,காங்கிரஸ் கட்சி பிரசாந்த் உடன் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் 2018ல் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜகவுடன் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கையை தகர்த்தது.
2017 ஆம் ஆண்டில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி (AAP0 மற்றும் ஷிரோமணி அகாலி தளம் (SAD) போன்ற கட்சிகளை வெற்றி கொண்டதன் மூலம் பிராந்தியக் கட்சிகளின் சவால்களை சமாளிக்க முடியும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
2019 ஆம் ஆண்டை விட, காங்கிரஸ் இப்போது பலவீனமாக உள்ளது என்பதை மார்ச் 10 ஆம் தேதியின் முடிவுகள் காட்டுகின்றன. நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து பிராந்திய கட்சிகளால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், கூட்டணியில் உள்ள சில பிராந்திய தலைவர்கள் உட்பட பல தலைவர்கள் ராகுல் காந்தியின் பரிந்துரைகளை வெளிப்படையாக புறக்கணிக்கத் தொடங்கியதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், கிஷோரால் காங்கிரஸின் தேர்தல் உத்திகளில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்ய முடியும், அவர் மற்ற தலைவர்களுடன் செய்ததைப் போலவே கட்சித் தலைமையின் நிலையை வலுப்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக அமையும் என்ற நம்பிகை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.
காங்கிரஸில் பிரசாந்த் கிஷோரின் பொறுப்பு:
காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பிரிவினரின் முன்மொழிவு என்னவென்றால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் குஜராத் தேர்தல் போன்ற ஒரு குறிப்பிட்ட பிரச்சாரத்தைக் கையாளும் ஆலோசகராக கிஷோரை ஈடுபடுத்துவது.
இருப்பினும், கிஷோர் அரசியல் ஆலோசராக இனி என் பணி இருக்காது என்பதால், கிஷோரின் இன்னிங்ஸ் இப்போது கட்சியின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால்,ஆலோசகராக அல்ல என்பது தெளிவாக தெரிய வருகிறது.
முன்னதாக ஏப்ரலில், கிஷோர் காங்கிரஸில் பொதுச் செயலாளராக சேருவார் என்று கட்சியில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது. அறிவிப்பு வெளியாகும் நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கட்சியில் எந்த குறிப்பிட்ட பதவியையும் கிஷோர் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 2024ஆம் ஆண்டிற்கான தனது திட்டத்தை நடைமுறைப்படுத்த முழு சுதந்திரம் வேண்டும் என்பது பிரசாந்தின் கோரிக்கையாக இருக்கிறது.
பிரசாந்த் கிஷோருக்கு உண்மையிலேயே கட்சியில் அதிகாரம் வழங்கப்பட்டால், காங்கிரஸ் குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தபடியாக கட்சியில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.