2024 மக்களவை தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் விளக்கமளித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 370 தொகுதிகளில் கவனம் செலுத்துவது போன்ற கட்சியின் பலவீனங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் கட்சியில் சேர ஆர்வம் காட்டியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த சந்திப்பின்போது,  கிஷோர் 2024 தேர்தலுக்கான விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளார். மேலும் அவரது ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் மற்றும் அவற்றை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதைப் பார்க்க ஒரு சிறிய குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், அவரைச் சந்தித்த பிறகு கூறினார். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேர்தல் வியூகம் குறித்து விளக்கம் அளித்தார். பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து காங்கிரஸ் குழு ஆய்வு செய்து ஒரு வாரத்தில் சோனியா காந்தியிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.






2024 பொதுத் தேர்தல் உட்பட, பெரிய தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸை மீண்டும் எழுச்சி பெற கிஷோர் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் குஜராத் தேர்தலை மையமாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மேலும், தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேருமாறும், ஆலோசகராகப் பணியாற்றாமல் இருக்குமாறும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண