Manakula Vinayagar Lakshmi Death : மயக்கம்.. படபடப்பு.. மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழப்பு.. கதறியழுத பொதுமக்கள்..

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு..

Continues below advertisement

உலகப் புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி விடியற்காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது.

Continues below advertisement

மணக்குள விநாயகர் கோயில் யானை இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும் இந்த ஆலயத்தில் உள்ள லட்சுமி என்ற பெண் யானை உள்ளது இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சிதந்த லட்சுமி காலில் கொலுசு அணிந்தும் முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் காட்சி தந்து இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது.

இந்த லட்சுமி யானை இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதாக இருக்கும்போது கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில் லட்சுமி  வழக்கம்போல் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து  சம்பவ இடத்திலே உயிரிழந்தது.

இதனை பார்த்த அவ்வழியே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் தகவலறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர், மேலும் அவர்கள் லட்சுமி யானைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் யானையின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூற் ஆய்வு செய்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும். லட்சுமி யானை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola