உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் முனைப்பில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வழியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பண்டிகை காலத்தில் கொரோனா அதிகரிப்பதை தடுக்க வேண்டும். மாநிலங்களிடம் போதுமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்காது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதே நேரம் பயப்பட வேண்டாம்” என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்