பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தேசிய சின்னமான அசோகத் தூணை, கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் திறந்து வைத்தார். இச்சிலை முழுவதும்  வெண்கலத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக சின்னத்தின் வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். 






புதிய பாராளுமன்ற கட்டிடம் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மேற்கூரையில் தேசியச் சின்னமான அசோகத் தூண் சிலையினை வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் இன்று (11/07/2022) காலை பிரதமர் நரேந்திர மோடி  6.5 மீட்டர் உயரமுள்ள அசோகத் துண் சிலையினை திறந்து வைத்தார்.  6.5 மீட்டர் உயரமுள்ள இந்த  அசோகத் தூண் சிலையின் மொத்த எடை 9,500 கிலோ.  இவ்வளவு கணம் கொண்ட சின்னத்தை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு துணை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.  எளிமையாக நடந்த இந்த சிலை திறப்பு நிகழ்வின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடியுடன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும்  மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிஆகியோரும் உடனிருந்தனர். 






சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி, புதிய பாராளுமன்ற அமைக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த கட்டுமானப் பணியாளர்களிடம் கலந்துரையாடினார். புதிய பார்லிமென்ட் கட்டிடம் கட்டும் பணியில் ஒரு மைல்கல் இன்று எட்டப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக கூறப்பட்டுள்ளது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண