பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜக சார்பில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றினார். அப்போது, “கடந்த 8 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட என்னை பிரதமராக பார்க்கவில்லை.
வெறும் ஆவணங்களில் கையெழுத்து போடும்போது மட்டும் நான் பிரதமர். அந்த ஆவணத்தில் கையெழுத்துவிட்ட பிறகு நான் 130 கோடி மக்களுக்கான சேவகன் மட்டுமே. என்னுடைய வாழ்க்கையே மக்களுக்கானது. இதற்கு முன்பாக மக்கள் அரசின் திட்டங்கள் ஏற்பட்டுள்ள ஊழல் தொடர்பாக பேசி வந்தனர்.ஆனால் தற்போது அரசின் திட்டங்களின் மூலம் அடைந்த பலன்கள் தொடர்பாக மக்கள் பேசி வருகின்றனர். தற்போது இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொடர்பாக உலகமே பேசி வருகின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவது குறித்து உலக வங்கி கூட பேசி வருகிறது”எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த் நீக்கியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்