7 கட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ABP குழுமத்தின் ஓர் அங்கமான பெங்கால் மொழித் தொலைக்காட்சிக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.


ABP பெங்கால் தொலைக்காட்சியான ABP அனந்தோ ஆசிரியர் சுமன் தே உடனான விரிவான பேட்டி இன்று (மே 28) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் பேட்டியில், மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த 3 ஆயிரம் கோடி ரூபாய், மாநிலத்துக்குத் திருப்பி அனுப்பப்படுமா?


மீண்டும் மீண்டும் மதவாத அமைப்புகளின் பெயர் அரசியலில் அடிபடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? பிரதமர் மோடியின் அரசியல் மேடைகள் அதிகம் பேசு பொருளாவது ஏன்? என்பன உள்ளிட்ட இதுவரை கேட்கப்படாத கேள்விகளுக்கு, சொல்லப்படாத பதில்களை அளித்திருக்கிறார் பிரதமர் மோடி. இவை குறித்தும் இன்னும் பல கேள்விகளுக்கான பதில்களை, விரிவாகக் காண 8 மணி வரை காத்திருங்கள்.


பிரதமர் மோடியின் இல்லத்தில் எடுக்கப்பட்ட, இந்த பேட்டியைக் காண: 



பெங்காலி மொழியிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பேட்டியை நேரடியாகக் காணலாம். இதோ இணைப்பு!